இணையத்தில் வெளியான 'தி கோட்'... படக்குழுவினர் அதிர்ச்சி

cinema-vijays-goat-full-movie-has-been-leaked-on-online
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-05 19:51:00

AGS-ன் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘தி கோட்’. பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி, மைக் மோகன், பிரேம்ஜி, வைபவ் என ஒட்டுமொத்த நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது. பல தொழில்நுட்ப அம்சங்களை பயன்படுத்தி படத்தில் ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ்களை புகுத்தியுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. விஜய் டபுள் ரோலில் நடிக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே உச்சக்கட்டத்தில் இருந்து வந்தது.

விஜய் விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ளதால் அவர் நடிக்கும் கடைசிக்கு முந்தைய படமாக தி கோட் அமைந்துள்ளது.  இந்த நிலையில் உலகெங்கிலும் இன்று தி கோட் படம் வெளியானது, படத்தின் வெளியீட்டை விஜய் ரசிகர்கள் ஆடல், பாடல், பட்டாசு, கட்டவுட், பாலபிஷேகம் என திருவிழா போல கொண்டாடினார்கள். கேரளா மற்றும் கர்நாடகாவில் காலை 4 மணிக்கே சிறப்பு கட்சி திரையிடப்பட்ட நிலையில் தமிழகத்தில் 9 மணிக்கு முதல் சிறப்பு கட்சி திரையிடப்பட்டது.

விஜயை திரையில் பார்த்த ரசிகர்கள் ஆர்ப்பரித்து உற்சாகத்துடனே படத்தை பார்த்து வருகின்றனர். தமிழகத்தில் 700 திரையரங்குகளில் தொடங்கியது, சிறப்பு காட்சியை பொறுத்தவரை இன்று மட்டும் 5 காட்சிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாக படத்தை திரையரங்குகளில் பார்த்து செல்கின்றனர், மேலும் படத்திற்கு தற்போது வரை பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், விஜயின் தி கோட் படம் முழுவதும் இணையத்தில் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படம் வெளியான முதல் நாளான இன்றே வாட்ஸ்ஆப், டெலிகிராம், மற்றும் இணையத்தளத்தில் தி கோட் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next