ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை பெறுவதே ஒவ்வொரு குடிமகனின் கடமை - ராகுல் காந்தி

rahul-gandhi-election-campaign-at-jammu-kashmir
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-05 18:47:00

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு பிறகு மாநில அந்தஸ்தும் நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியில் உள்ளன. ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.கவும் தனித்து போட்டியிடுகின்றன. சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் ஜம்மு காஷ்மீர் தேர்தல் இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

90 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு செப். 18, செப். 25 மற்றும் அக். 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றன. வாக்கு எண்ணிக்கை அக். 8ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, நேற்று அனந்தநாக் மாவட்டத்தின், தூரு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை பெறுவதே நமது கடமை. அது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று பேசியிருக்கிறார்.

அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது; “விடுதலை பெற்ற இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாறியுள்ளது. நாங்கள் யூனியன் பிரதேசங்களை மாநிலங்களாகவும், மாநிலங்களை பிரிக்கும்போதும் ஜனநாயகத்தை ஆழமாக்குகிறோம். அதேபோல் உரிமைகளை முன்னெடுத்து செல்கிறோம். ஆனால், மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டபோது உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இந்த அநீதி உங்களுக்கு இழைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரை மீண்டும் மாநிலமாக ஆக்குவது எங்கள் கடமை. இது வெறும் காங்கிரஸ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி அல்லது இந்தியா கூட்டணி கடமை கிடையாது. ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை.

பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸும். உங்களிடம் எதுவேண்டுமானாலும் சொல்லும். ஆனால், காஷ்மீர் மக்களுக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை நாங்கள் வழங்குவோம். நாங்கள் தேர்தலுக்கு முன்பே மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றோம். ஆனால், பா.ஜ.க.வுக்கு அது தேவையற்றதாக இருக்கிறது. அவர்களுக்கு தேர்தல் தான் முதல் தேவையாக உள்ளது. நாங்கள் அதனை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உங்களுக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்” என்று பேசினார்.

Trending News
Recent News
Prev
Next