வெறும் 5 பந்தில் முடிந்த சர்வதேச டி20 போட்டி… கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நடந்த சுவாரஸ்யம்

cricket-t20-qualifier-singapore-vs-magnolia-2nd-innings-end-in-just-5-balls-first-time-in-the-history
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-05 18:07:00

வெறும் 5 பந்துகளில் சர்வதேச டி20 மேட்ச் முடிந்தது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அப்படியான ஒரு சுவாரசிய சம்பவம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடந்துள்ளது.

10 ஆவது உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் 2026 ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ளது. பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை இந்த போட்டி நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் கலந்து கொள்ளும் அணிகளுக்கான தகுதி போட்டிகள் தற்போது நடத்தப்படுகின்றன. ஆசியாவில் இருந்து தகுதி பெறும் அணிகளுக்கான போட்டி கடந்த 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சிங்கப்பூர், மியான்மர், மாலத்தீவுகள், குவைத், மங்கோலியா, ஹாங்காங், மலேசியா ஆகிய அணிகளில் இதில் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், சிங்கப்பூர் மற்றும் மாலத்தீவுகள் அணிகள் மலேசியாவின் பங்கி நகரில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணியளவில் மோதின.

டாஸ் வென்ற சிங்கப்பூர் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து மங்கோலியா அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய மோகன் விவேகானந்தன் ரன் ஏதும் எடுக்காமலும், சஞ்சிர் நட்சாக்டோ 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்களில் சேட்பிலேக் கன்டுல்கா 1 ரன்னும், விக்கெட் கீப்பர் கன்டெம்பெரல் கன்போல்ட் 2 ரன்களும் எடுத்தனர்.

10 ஓவர்கள் நிறைவு பெற்றபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மங்கோலியா அணி 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய சிங்கப்பூர் அணி வெறும் 5 பந்துகளில் 1 விக்கெட் 13 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெறும் 5 பந்துகளில் ஒரு இன்னிங்ஸ் முடிந்தது என்பது இதுவே முதன் முறையாகும். இந்த சுவாரசியமான சம்பவம் இணையத்தில் அதிகம் படிக்கப்பட்டு வருகிறது.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next