மதுரை: தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா இன்று தொடங்குகிறது

madurai-book-festival-starts-today-at-tamukkam-maidannam
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-09-06 08:49:00

மதுரை,

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக ப.பா.சி. ஒருங்கிணைப்பில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான புத்தக திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மாநாட்டு மையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இன்று தொடங்கி 11 நாட்கள் 16-ம் தேதி புத்தக திருவிழா நடைபெற உள்ளது.

புத்தகத் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்குகள், குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், புத்தகத் திருவிழாவிற்கு வரும் அனைவரும் சுவையான, சுகாதாரமான சிற்றுண்டி உணவு வகைகளை உண்டு மகிழ உணவு அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

புத்தக திருவிழாவில் தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. புத்தக திருவிழா தினந்தோறும் மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News
Recent News
Prev
Next