கேரள நீதிமன்றத்தில் தாக்கலாகும் ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கை - அலறும் மல்லுவுட்!

hema-committee-report-kerala-high-court-forms-special-bench-with-woman-judge-to-hear-petitions
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-05 20:58:00

மலையாள சினிமாத்துறையில், பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை தோலுரித்துக்காட்டியுள்ள ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கை வரும் 9ஆம் தேதி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 

கேரளாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் தொடர்பான ஹேமா கமிட்டியின் அறிக்கை அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஹேமா கமிட்டி தனது அறிக்கையைச் சமர்ப்பித்து நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, கேரள அரசு அந்த அறிக்கையை வெளியிட்டது.

அறிக்கையின் 290 பக்கங்களில் 44 பக்கங்கள் வெளியிடப்படவில்லை. இந்தப் பக்கங்களில், திரையுலகில் தங்களைத் துன்புறுத்தியவர்களின் பெயர்களை பாதிக்கப்பட்ட பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை, டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பிக்குமாறு, அரசுக்கு, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த அறிக்கை வரும் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை விவரங்களும் அதிலும் இடம்பெறும் எனத் தெரிகிறது.  இதனிடையே, பாலியல் புகாரில் இயக்குநர் ரஞ்சித் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு பிணை பெறக்கூடியது என்பதால் முன் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே கேரளாவைப் போன்று கர்நாடகாவிலும், கன்னட திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என அம்மாநில திரைத்துறையினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News
Recent News
Prev
Next