EPF பலன்கள் மற்றும் பணத்தை வித்ட்ரா செய்வதற்கான வழிமுறைகள்!!!

epf-benefits-and-procedures-for-withdrawal
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-20 20:46:00

இந்தியாவில் உள்ள சம்பளம் வாங்கும் அனைத்து பணியாளர்களுக்கும் எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் (EPF) என்ற ஓய்வு கால சேமிப்புத் திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டமானது எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் அன்ட் மிசலேனியஸ் ப்ரோவிஷன் ஆக்ட், 1952 -இன் கீழ் எந்த நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்களும் ஓய்வு கால பலன்களை பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் தகுதி வரம்பு மற்றும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்:

இந்த திட்டத்தில் பங்கு பெறுவதற்கு ஒருவர் 18 வயது முதல் 58 வயது வரையிலானவராக இருக்க வேண்டும். அவர் வேலை செய்யக்கூடிய நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்க வேண்டும். எந்த ஒரு நிறுவனத்திலும் ஒரு மாதத்திற்கு 15,000 ரூபாய்க்கும் மேலாக சம்பாதிப்பவர் இந்தத் திட்டத்தில் பங்களிக்கலாம்.

EPF திட்டத்தின் பலன்கள்:

ஓய்வு காலத்திற்குப் பிறகு கூட பொருளாதார சுதந்திரத்தை அடைவதற்கு இந்தத் திட்டம் உங்களுக்கு உதவும். ஓய்வு காலத்திற்கு முந்தைய அதே வாழ்க்கை முறையை பராமரிப்பதற்கு நீங்கள் யாரையும் நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது ஒன் டைம் இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம் கிடையாது. ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் உங்களால் முடிந்த தொகையை நீங்கள் முதலீடு செய்யலாம். இது உங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு அவசர பணத்தேவையின்போது உதவக்கூடும்.

இந்த இடத்தில் உங்களுக்கு மற்றொரு கேள்வி எழலாம்: ஒரு நிறுவனத்தில் இருந்து நீங்கள் பணி விலகிவிட்டால் உங்களுடைய PF தொகைக்கு என்ன ஆகும்? நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து பணி விலகிய பிறகு உங்களுடைய PF தொகையை வித்ட்ரா செய்வதற்கு நீங்கள் பின்வரும் தகுதி வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்:

ஒரு மாத நோட்டீஸ் பீரியட் கொடுத்திருக்க வேண்டும் அல்லது அதற்கு தகுந்த பணத்தை நிறுவனத்திற்கு செலுத்தி இருக்க வேண்டும்.

தற்போதைய நிறுவனத்தில் தொடர்ந்து இரண்டு மாதங்களாவது சேவை புரிந்திருக்க வேண்டும்.

தனி நபர் விவரங்களை EPFO போர்ட்டலில் அப்டேட் செய்திருக்க வேண்டும்.

நீங்கள் பணியிலிருந்து விலகிய பிறகு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் உங்களுடைய PF தொகையை வித்ட்ரா செய்வதற்கான வழிமுறை:

முதலில் உங்களுடைய தற்போதைய நிறுவனத்தில் நீங்கள் படிவம் 19ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த படிவத்தை நீங்கள் EPFO அதிகாரபூர்வ வெப்சைட் அல்லது அருகில் உள்ள EPFO அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய நிறுவனத்தில் இதனை சமர்ப்பிக்கும் முன்பு படிவத்தில் நீங்கள் கையெழுத்திட வேண்டும்.

படிவத்துடன் சேர்த்து கேன்சல் செய்யப்பட்ட வங்கிக் கணக்கு செக் அல்லது உங்களுடைய வங்கிக் கணக்கு பாஸ் புக்கின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.

ஒருவேளை நீங்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறினால் உங்களுடைய PF அக்கவுண்ட்டை பழைய நிறுவனத்திலிருந்து புதிய நிறுவனத்திற்கு ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம்.

இதற்கு நீங்கள் உங்களுடைய தற்போதைய நிறுவனத்தில் படிவம் 13ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

படிவத்தை நீங்கள் சமர்ப்பித்த பிறகு அனைத்து விவரங்களையும் உங்களுடைய தற்போதைய நிறுவனம் வெரிஃபை செய்து உங்கள் கோரிக்கையை அங்கீகரிக்கும். இந்த செயல்முறை நிறைவு பெறுவதற்கு தோராயமாக 20 நாட்கள் ஆகும்.

உங்களுடைய வித்ட்ராயல் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டதும் PF தொகை 30 நாட்களுக்குள் ஆட்டோமேட்டிக்காக உங்களுடைய வங்கிக் கணக்கில் கிரெடிட் செய்யப்படும்.

EPF அக்கவுண்டில் இருந்து ஆன்லைனில் பணத்தை வித்ட்ரா செய்வதற்கான வழிமுறை:

படி 1: EPFO அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்கு சென்று உங்களுடைய UAN மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி லாகின் செய்யவும்.

படி 2: ‘Online Services’ டேபை கிளிக் செய்து, ட்ராப் டவுனில் உள்ள ‘Claim’ ஆப்ஷனைத் தேர்வு செய்யுங்கள்.

படி 3: இப்போது உங்களுடைய வங்கிக் கணக்கு எண்ணை என்டர் செய்து ‘Verify’ என்பதை கிளிக் செய்யவும்.

படி 4: ‘Yes’ என்பதை கிளிக் செய்து ‘Proceed with Online Claim’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

படி 5: ‘I want to apply for’ என்ற டேபின் கீழ் நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் வித்ட்ராயல் கிளைம் வகையை தேர்வு செய்யுங்கள்.

**படி 6: ‘**PF Advance’ படிவத்தை தேர்வு செய்யுங்கள். EPF வித்ட்ராயலுக்கு பின்னணியில் உள்ள காரணத்தை விவரித்து, உங்களுடைய படிவத்தை சமர்ப்பிக்கவும். வெரிஃபிகேஷன் காரணத்திற்காக ஒரு சில டாக்குமெண்ட்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டி இருக்கும்.

படி 7: அங்கீகாரம் பெற்ற பிறகு PF தொகை உங்களுடைய வங்கிக் கணக்கில் கிரெடிட் செய்யப்படும்.

Trending News
Recent News
Prev
Next