சிமெண்ட் தொழிலில் ‘ராஜா’... சொத்து மதிப்பு ரூ.57 ஆயிரம் கோடி... பெனு கோபால் பங்கூர் யார் தெரியுமா?

success-story-of-benu-gopal-bangur-the-chairman-of-shree-cement-a-company-worth-rs-57000-crore
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-05 20:25:00

ஸ்ரீ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சேர்மன் பெனு கோபால் பங்கூர் இந்தியாவில் இருக்கக்கூடிய பணக்காரர்களில் ஒருவர். அது மட்டுமல்லாமல், இவர் மேற்கு வங்காளத்தில் இருக்கக்கூடிய பணக்காரர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார். 1931ஆம் ஆண்டு பிறந்த பெனு கோபால் பங்கூர் 1992-ல் இந்தியாவில் இருக்கக்கூடிய மிக வயதான பில்லியனர்களில் ஒருவர் என்ற பட்டத்தை வென்றார். கொல்கத்தாவில் மார்வாடி தொழில் செய்யக்கூடிய குடும்பத்தில் பிறந்த பெனு கோபால் பங்கூர் தனது கல்வியை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

பங்குச் சந்தை தரகராக இருந்து வந்த பெனு கோபால் பங்கரின் தாத்தாவான முங்கி ராம் பாங்கரால் தற்போது இருக்கக்கூடிய பாங்கரின் தொழில் சாம்ராஜ்யம் தொடங்கப்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த தொழில் சாம்ராஜ்யம் ஆரம்பிக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டில் சிறப்பாக வளர்ந்து கொண்ட இந்த தொழிலை முங்கி ராம் 5 குழுக்களாக பிரித்தார்.  இதில் ஒரு பங்கு பெனு கோபால் பங்கருக்கு வந்தது.

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தகவலின்படி, ஜூலை 17, 2023 தேதி வரை பெனு கோபால் பங்கரின் நெட் வொர்த் 6.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது இது இந்திய பண மதிப்பு படி 57 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். தற்போது பெனு கோபால் பங்கூர் கொல்கத்தாவில் இருக்கக்கூடிய ஒரு வில்லாவில் வசித்து வருகிறார். அவரது மனைவி இறந்து விட்டதால் தனது இரு பிள்ளைகளுடன் அந்த மாளிகையில் வசித்து வருகிறார். அவரது மகன் ஹரி மோகன் பாங்கர் ஒரு ஐஐடி பட்டதாரி. இவர் 1990ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ சிமெண்ட் நிறுவனத்தை நிர்வாகம் செய்து வருகிறார்.

1979ஆம் ஆண்டில் ஸ்ரீ சிமெண்ட் துவங்கப்பட்டது. ஸ்ரீ அல்ட்ரா ஜங்க் ரோதாக், பாங்கர் சிமெண்ட் மற்றும் ராக் ஸ்டார் போன்ற பெயர்களின் கீழ் ஸ்ரீ சிமெண்ட் நிறுவனம் பிராண்டட் சிமெண்ட்களை விற்பனை செய்து வருகிறது.

தற்போது ஆந்திர பிரதேசத்தில் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதன் மூலமாக புதிய சிமெண்ட் தொழிற்சாலையை துவங்க உள்ளதாக ஸ்ரீ சிமெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்ரீ சிமெண்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 89,750 கோடி ரூபாய் ஆகும். சிமெண்ட் சந்தையை பொறுத்தவரை ஸ்ரீ சிமெண்ட் இந்தியாவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தை இவ்வளவு பெரியதாக உயரத்திற்கு கொண்டு சென்ற புகழ் நிச்சயமாக பெனு கோபால் பங்கருக்கு சேரும்.

Trending News
Recent News
Prev
Next