‘Paradise on Earth’ 6 நாள் டூர் பேக்கேஜ்... ஐஆர்சிடிசி-ன் புதிய அறிமுகம்! எங்கு தெரியுமா?

with-irctcs-new-6-day-tour-package-you-can-explore-kashmir
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-05 20:13:00

ஐஆர்சிடிசி நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்காக பல்வேறு டூர் பேக்கேஜ்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்ப ரேஷன் (IRCTC), ரயில்வே பயணிகளுக்கான பயணத்தை எளிதாக்க மற்றும் அவர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருக்கும் வகையிலான பல டூர் பேக்கேஜ்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் காஷ்மீரின் அழகிய இயற்கை காட்சிகளை பயணிகள் கண்டு களிக்கும் வகையில் ஐஆர்சிடிசி-யானது சமீபத்தில் புதிய டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. காஷ்மீரை பெரும்பாலும் ‘பூமியின் சொர்க்கம்’ என்று அழைக்கப்படுகிறது. காஷ்மீர் பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது, ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் அதன் அழகை காண வருகிறார்கள். செப்டம்பரில் காஷ்மீரின் இயற்கை அழகை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், ஐஆர்சிடிசி வழங்கும் இந்த மலிவு விலை பேக்கேஜ் உங்களுக்கு சரியானதாக இருக்கும்.

ஐஆர்சிடிசி அறிவித்துள்ள பேக்கேஜுக்கு பாரடைஸ் ஆன் எர்த்-காஷ்மீர் எக்ஸ் பெங்களூரு என்று பெயரிடப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசியின் காஷ்மீர் டூர் பேக்கேஜ் 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கானது ஆகும். இந்த சுற்றுலா பேக்கேஜில் ஸ்ரீநகர், பஹல்காம், குல்மார்க் மற்றும் சோன்மார்க் போன்ற அழகிய இடங்களுக்கு செல்வார்கள். காலை உணவு மற்றும் இரவு உணவு, ஹோட்டல் தங்குமிடங்கள், பயணத்திற்கான வண்டி சேவைகள் மற்றும் பயணக் காப்பீடு ஆகியவையும் இதில் அடங்கும்.

சுற்றுலாத் தொகுப்பின் முக்கிய விவரங்கள்:

பேக்கேஜ் பெயர்: பாரடைஸ் ஆன் எர்த்-காஷ்மீர் எக்ஸ் பெங்களூரு (SBA 15)

முக்கிய இடங்கள்: ஸ்ரீநகர், பஹல்காம், குல்மார்க் மற்றும் சோன்மார்க்

சுற்றுப்பயணத்தின் காலம்: 5 இரவுகள் மற்றும் 6 நாட்கள்

சுற்றுப்பயண தேதி: செப்டம்பர் 17, 2024

பயண முறை: விமானம்

செலவுகள்:

இந்த டூர் பேக்கேஜின் விலை ஒரு நபருக்கு ரூ.46,850 முதல் தொடங்குகிறது. இந்த டூர் பேக்கேஜில் நீங்கள் தனியாக பயணம் செய்ய விரும்பினால், ஒரு நபருக்கு ரூ. 59,700 கட்டணம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், டூர் பேக்கேஜில் இரண்டு பேருடன் பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ. 47,900 கட்டணம் செலுத்த வேண்டும்.

முன்பதிவு செய்வது எப்படி:

2. மேலும் தகவல்களுக்கு 9003140699 மற்றும் 8595931291 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

பேக்கேஜில் சேர்க்கப்பட்டவை:

எகானமி கிளாஸில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான டிக்கெட்டுகள் (பெங்களூரு-அமிர்தசரஸ்-ஸ்ரீநகர்-அமிர்தசரஸ்-பெங்களூரு).

ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் 3 இரவுகள் தங்குதல்.

பஹல்காமில் உள்ள ஒரு ஹோட்டலில் 1 இரவு தங்குதல்.

ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் 1 இரவு தங்குதல்.

ஷிகாரா சவாரி.

5 முறை காலை உணவு மற்றும் இரவு உணவு

IRCTC டூர் எஸ்கார்ட்டின் சேவைகள்.

பயணக் காப்பீடு

ஜிஎஸ்டி.

Trending News
Recent News
Prev
Next