ஜான்வி கபூரின் 'உலாஜ்' படத்தின் புதிய அப்பேட்

ulajh-new-poster-all-eyes-on-janhvi-kapoor-and-her-secrets
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-07-20 18:18:00

புதுடெல்லி,

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்துள்ளார். தேவரா என்ற படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகி இருக்கிறார். தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்டு வருகிறார். 'கோலமாவு கோகிலா' படத்தின் இந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.

தற்போது இவர் 'உலாஜ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை, தயாரிப்பாளர் சுதன்ஷு சாரியா இயக்கியுள்ளார். ஜிங்கிலி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. இந்தநிலையில் இப்படத்தின் டிரெய்லர் கடந்த 16-ந் தேதி வெளியானது. தற்போது இந்த படத்தின் போஸ்டர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜான்வி கபூர் பகிர்ந்துள்ளார்.

இந்த படத்தில் குல்ஷன் தேவையா, ரோஷன் மேத்யூ, ராஜேஷ் தைலாங், மெய்யாங் சாங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது..

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next