M7 Pro மற்றும் C75... இந்தியாவில் புதிதாக இரண்டு 5ஜி மொபைல்களை அறிமுகப்படுத்தி இருக்கும் போகோ...!

poco-is-launching-two-new-5g-mobiles-in-india-ghta-nw-amu
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-12-20 15:07:00

பிரபல ஸ்மார்ட் ஃபோன் பிராண்டாக இருக்கும் போகோ நிறுவனம் இந்தியாவில் புதிதாக Poco M7 Pro 5G மற்றும் Poco C75 5G ஆகிய இரண்டு மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல்கள் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான HyperOS உடன் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மொபைல்கள் முறையே MediaTek Dimensity மற்றும் Snapdragon உள்ளிட்ட சிப்செட்களைக் கொண்டுள்ளன.

இந்தியாவில் Poco C75 மற்றும் Poco M7 Pro மொபைல்களின் விலை விவரங்கள்:

Poco M7 Pro மொபைலின் ஆரம்ப விலை ரூ.14,999 ஆகும். இதில் 6GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, அதே நேரத்தில் 8GB + 256GB வேரியன்ட் விலை ரூ.16,999 ஆகும். இது ஆலிவ் ட்விலைட், லூனார் டஸ்ட் மற்றும் லாவெண்டர் ஃப்ரோஸ்ட். உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் Poco C75 மலிவு விலை மொபைல் ஆகும். 4GB + 64GB என சிங்கிள் வேரியன்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த மொபைலின் விலை ரூ.7,999 ஆகும். இந்த 2 மொபைல்களும் விரைவில் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

போகோவின் M7 Pro 5G மொபைல் ஸ்பெசிஃபிகேஷன்கள்:

இந்த மொபைலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 2,100nits பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்ட 6.67-இன்ச் ஃபுல் -எச்டி+ (1,080 x 2,400 பிக்சல்) சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா SoC சிப்செட் இதில் உள்ளது.

மேலும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ்-உடன் இந்த மொபைல் வருகிறது. Poco M7 Pro மொபைலின் பின்பக்கம் 1/1.95-இன்ச் 50-MP Sony LYT-600 பிரைமரி சென்சார் மற்றும் 2-MP டெப்த் சென்சார் உள்ளது. செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக 40-MP சென்சார் உள்ளது. Dolby Atmos டெக்னலாஜியை சப்போர்ட் செய்யும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் இந்த மொபைலில் உள்ளன.

இதில் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் சார்ஜ் செய்யக்கூடிய 5,110mAh பேட்டரி உள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 3.5mm ஆடியோ ஜாக், USB Type-C போர்ட், ப்ளூடூத் 5.3, GPS, GLONASS, Wi-Fi, 5G மற்றும் 4G VoLTE ஆகியவை அடங்கும். இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் உள்ளது. டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ஸிற்கான IP64 ரேட்டிங்கைக் கொண்டுள்ளது.

போகோவின் Poco C75 5G மொபைல் ஸ்பெசிஃபிகேஷன்கள்:

Poco C75 மொபைலானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 600nits பீக் பிரைட்னஸை சப்போர்ட் செய்யும் 6.88-இன்ச் HD+ (720 x 1,600 பிக்சல்) ஸ்கிரீனைக் கொண்டுள்ளது. இதில் octa-core Snapdragon 4s Gen 2 ப்ராஸர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாக கொண்ட Xiaomi-ன் HyperOS-ல் இந்த மொபைல் இயங்குகிறது.

Poco C75 மொபைல் 50MP ரியர் கேமராவைக் கொண்டுள்ளது, மேலும் 5MP ஃப்ரன்ட் சென்சார் உள்ளது. இது 18W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,160mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ஸிற்கான IP52 ரேட்டிங்கைக் கொண்டுள்ளது. மேலும், சைட்-மவுண்ட்டட்ஃபிங்கர் பிரின்ட் கொண்டிருக்கிறது Poco C75.

Ads
Recent Technology News
Trending News
Recent News
Prev
Next