இன்டெல் லூனார் லேக் ப்ராசசர்.. லெனோவா யோகா ஸ்லிம் 7ஐ ஆரா எடிஷன் இந்தியாவில் அறிமுகம்!
லெனோவா யோகா ஸ்லிம் 7i ஆரா எடிஷன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சீன நிறுவனத்தின் இந்த சமீபத்திய லேப்டாப்பில் லூனார் லேக் என்ற புதிய இன்டெல் கோர் அல்ட்ரா சீரிஸ் 2 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது ஒரு பிரத்யேக நியூரோ ப்ராசஸிங் யூனிட் (NPU) உடன் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களை ஆதரிக்கிறது மற்றும் இது சான்றளிக்கப்பட்ட மைக்ரோசாப்ட் கோபிலட்+ பிசி ஆகும். இந்த லேப்டாப் ஆனது 2.8K ஐபிஎஸ் ஸ்கிரீன், Wi-Fi 7, 1TB SSD ஸ்டோரேஜ் மற்றும் விண்டோஸ் 11 ஹோம் வேர்ஷன் மூலம் இயங்குகிறது.
இந்தியாவில் லெனோவா யோகா ஸ்லிம் 7i ஆரா எடிஷன் விலை:
இந்தியாவில் லெனோவா யோகா ஸ்லிம் 7i ஆரா எடிஷன் விலை ஆனது ரூ.1,49,990 இலிருந்து தொடங்குகிறது மற்றும் லூனா கிரே வண்ண விருப்பத்தில் வழங்கப்படுகிறது. Lenovo.com, லெனோவா எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்கள், இ-காமர்ஸ் இணையதளங்கள் மற்றும் பிற ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களில் இருந்து இதை வாங்கலாம். இது அடோப் கிரியேட்டிவ் கிளவுட் இன் 2 மாத மெம்பர்ஷிப்புடன் வருகிறது.
அதன் புதிய லேப்டாப் ‘கஸ்டம் டு ஆர்டர்’ (CTO) விருப்பமாகவும் கிடைக்கிறது என்று நிறுவனம் கூறுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர் தனது தேவைக்கேற்ப ப்ராசசர், ஆப்ரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களை மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது. இந்த சேவை பிராண்டின் இணையதளத்தில் மட்டுமே பிரத்தியேகமாக கிடைக்கிறது.
லெனோவா யோகா ஸ்லிம் 7i ஆரா எடிஷன் விவரக்குறிப்புகள்:
லெனோவா யோகா ஸ்லிம் 7i ஆரா எடிஷன் ஆனது 120Hz ரெஃபிரேஷ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் 2.8K (2880 x 1800 பிக்சல்கள்) IPS டச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 100 சதவீதம் DCI-P3 கலர் காமட்-ஐ கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப்பில் இ-ஷட்டருடன் கூடிய 1080p முழு HD IR கேமரா உடன் வருகிறது.
இந்த லேப்டாப்பில் இன்டெல் கோர் அல்ட்ரா ப்ராசசர் சீரிஸ் 2 மூலம் இயக்கப்படுகிறது, இது 8533MHz இல் இயங்கும் 32GB LPDDR5X RAM மற்றும் 1TB ஆன்போர்டு M.2 PCIe ஜென்4 SSD ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் பிரத்யேகமாக நியூரோ ப்ராசஸிங் யூனிட் (NPU) உள்ளது, இது வினாடிக்கு 120 டிரில்லியன் செயல்பாடுகளை (டிரில்லியன் ஆபரேஷன்ஸ் பேர் செகண்ட்(TOPS)) ஆதரிக்கிறது. இந்த லேப்டாப்பில் 8-கோர் ஹைப்ரிட் ஆர்கிடெக்ச்சர் மற்றும் ஹை பெர்ஃபார்மென்ஸ் GPU ஆகியவற்றை வழங்குகிறது.
இந்த லேப்டாப்பில், ஸ்மார்ட் மோட் போன்ற அம்சங்களையும் பெறுவீர்கள், இது பணிச்சுமையைப் பொறுத்து செயல்திறன் மற்றும் சிஸ்டம் செட்டிங்களை மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது. மற்றும் அட்ரக்ஷன் மோட் ஆனது கவனத்தை யூசர்களின் கவனத்தை திசை திரும்ப விடாமல், கவனம் செலுத்த உதவுகிறது, இது தவிர, இந்த லெனோவா லேப்டாப்பில் ஸ்மார்ட் ஷேர் வசதியும் உள்ளது. மேலும், லெனோவா யோகா ஸ்லிம் 7i ஆரா எடிஷன் ஆனது கண் ஆரோக்கிய அம்சத்துடன் வருகிறது.
லௌயர் லைட் என்ஹான்ஸ்மென்ட், விர்ச்சுவல் ப்ரெஸன்டர் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான பேக்கிரௌண்ட் ப்ளர் போன்ற பல AI அம்சங்கள் இந்த லேப்டாப்பில் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர இந்த லேப்டாப்பில் ஷீல்ட் மோட் போன்ற அம்சமும் உள்ளது, இது பிரைவசி அலெர்ட், பிரைவசி கார்டு மற்றும் ஆட்டோ ப்ராம்ப்ட் VPN மூலம் உங்கள் பிரைவசியைப் பாதுகாக்கிறது. இணைப்பைப் பொறுத்தவரை, இந்த லேப்டாப்பில் Wi-Fi 7, ப்ளூடூத் 5.4 மற்றும் தண்டர்போல்ட்4 போர்ட் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர இந்த லேப்டாப்பில் 4-செல் 70Whr பேட்டரியும் உள்ளது.