தர்மபுரி கலெக்டர் இல்லத்தின் சுற்றுச்சுவர் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து

accident-container-lorry-crashes-into-dharmapuri-collector-residence-wall
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-12-22 23:12:00

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில் மாவட்ட கலெக்டரின் இல்லம் அமைந்துள்ளது. இந்நிலையில், தர்மபுரியில் உள்ள ஒரு கார் ஷோரூமுக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் கார்கள் கொண்டு வரப்பட்டன. அந்த லாரியை மன்சூர் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

அப்போது அவர் கார் ஷோரூமை விட்டு தாண்டி சென்றுவிட்டதால் நிலையில், மீண்டும் வண்டியை திருப்புவதற்காக லாரியை ரிவர்சில் இயக்கியுள்ளார். அப்போது எதிர்பராத விதமாக கலெக்டர் இல்லத்தின் சுற்றுச்சுவர் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

விபத்து நடந்த சமயத்தில், கலெக்டர் இல்லத்தின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, லாரியை ஓட்டி வந்த டிரைவர் மன்சூர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next