வாட்ஸ்அப்பில் இந்த மாற்றங்கள் தெரிகின்றதா...? உங்கள் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டது கன்ஃபார்ம்...!

if-you-see-these-changes-on-whatsapp-your-account-may-have-been-hacked-ghta-nw-amu
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-12-22 11:59:00

வாட்ஸ்அப் நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில், மெசேஜ் அனுப்புவது மற்றும் கால் செய்வது, ஆன்லைனில் பணம் செலுத்துவது உட்பட மற்ற பணிகளும் வாட்ஸ்அப் மூலம் செய்யப்படுகின்றன. இந்த ஆப்-ன் பயன்பாடு அதிகரித்து வருவதால், ஹேக்கிங் மற்றும் சைபர் கிரைம் வழக்குகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன.

எனவே, தனிப்பட்ட டேட்டாவை அக்சஸ் செய்ய ஹேக்கர்கள் பல வழிகளைப் பயன்படுத்துகின்றனர். சுருக்கமாக சொல்லப்போனால், நிதி பரிவர்த்தனைகள் இந்த ஆப் மூலம் செய்யப்படுவதால், ஹேக்கர்கள் எப்போதும் எண்ணற்ற வாட்ஸ்அப் அக்கவுண்ட்களில் தங்கள் பேங்க் அக்கவுண்ட்களை வைத்திருக்கிறார்கள். எனவே உங்கள் அக்கவுண்டை பாதுகாப்பாக வைத்திருப்பது மிக முக்கியமான விஷயம்.

இருப்பினும், வாட்ஸ்அப்பில் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டின் சில அறிகுறிகள் உள்ளன. இந்த அறிகுறிகள் உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படுவதைத் தவிர்க்க உதவும். ஒருவரின் வாட்ஸ்அப் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதா என்பதை அறிய சில அறிகுறிகள் உள்ளன.

வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டதா இல்லையா என்பதை எப்படி அறிந்து கொள்வது?

தெரியாத கான்டெக்ட் நம்பர்கள்:

உங்கள் கான்டெக்ட் பட்டியலில் நீங்கள் சேர்க்காத சில பெயர்கள் மற்றும் எண்களைக் கண்டால், உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்ட வேறொருவரால் பயன்படுத்தப்படுகிறது.

தெரியாத கான்டெக்ட் நம்பரில் சேட்:

உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டிலிருந்து தெரியாத கான்டாக்ட் நம்பருடன் சேட் செய்யப்பட்டிருந்தால், உங்கள் அக்கவுண்ட் கண்டிப்பாக ஹேக் செய்யப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

லாகின் செய்வதில் சிரமம்:

பலமுறை முயற்சித்தும், உங்கள் அக்கவுண்டில் லாகின் செய்ய முடியவில்லை என்றால், உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று அர்த்தம்.

வெரிஃபிகேஷன் கோட்:

உங்கள் வாட்ஸ்அப்பில் வெரிஃபிகேஷன் கோட்-ஐ நீங்கள் தொடர்ந்து பெற்றால், உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை ஹேக்கிங்கில் இருந்து பாதுகாப்பது எப்படி?

வாட்ஸ்அப் அக்கவுண்ட் பாதுகாப்பிற்காக டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் கோட்-ஐ செயல்படுத்தி, ஸ்ட்ராங் பின் -ஐ செட் செய்யவும்.

தெரியாத லிங்க் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும் மற்றும் சந்தேகத்திற்குரிய மெசேஜ்களை தவிர்த்து விடவும்.

வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை பாதுகாப்பாக வைத்திருக்கும் பாஸ்வோர்டை அடிக்கடி மாற வேண்டும்.

யாராவது தங்கள் வாட்ஸ்அப் அக்கௌன்ட்-ஐ ஹேக் செய்யப்பட்டதாக உணர்ந்தால், அவர்கள் உடனடியாக வாட்ஸ்அப் ஹெல்ப்லைனைத் தொடர்பு கொள்ளலாம்.

யூசர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் வாட்ஸ்அப் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறிகளைப் புறக்கணிக்கக் கூடாது. இந்த சிறிய வழிகள் ஒருவரின் தனிப்பட்ட டேட்டாவை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.

Ads
Recent Technology News
Trending News
Recent News
Prev
Next