Siragadikka Assai | பணத்திற்காக மனோஜ் செய்யும் காரியம்.. துணைபோகும் ரோகிணி.. ஏமாறும் குடும்பம்.!
சிறகடிக்க ஆசை சனிக்கிழமை எபிசோடில் சிட்டி ரோகிணியிடம் மிரட்டி பணம் கேட்க அதை எப்படி கொடுப்பது என யோசிக்கிறார். பின் விஜயா வக்கீலிடம் வாங்கிய பணம் பார்வதியிடம் இருப்பது யோசனைக்கு வருகிறது. பார்வதி வீட்டிற்கு சென்று பணத்தை திருடுகிறார். அத்துடன் கதை நிறைவடைந்தது.
இன்றைய எபிசோடில் மீனாவின் புது பிசினஸ் ஐடியாவுக்காவுக்காக ஃபோட்டோஷூட் நடக்கும் சமயத்தில் விஜயா வீட்டிற்கு வருகிறார். அந்த சமயத்தில் முத்து, மீனாவின் கையை பிடித்துக்கொண்டு நிற்கிறார். அப்போது திரும்பி நிற்கும் மீனாவை வேறொரு பெண் என நினைத்து விஜயா, மீனாவுக்கு துரோகம் செய்யறியா என மிரட்டுகிறார். பின் உடனே மீனா திரும்பி அத்தை நான் தான்.. என்கிறார். அந்தசமயத்தில் விஜாவுக்கு மீனா மீது இருக்கும் பாசம் வெளிப்படுகிறது. இதை அறியும் முத்து, ”பாத்தியா மீனா அம்மாவுக்கு உன் மேல எவ்வளவு பாசம்” என்கிறார். உடனே விஜயாவும், மீனாவும் பாசத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் காட்சி ரசிக்கும்படியாக உள்ளது.
அடுத்ததாக ரோகிணி திருடிய பணத்தை சிட்டியிடம் கொண்டுபோய் கொடுக்கிறார். பணத்தை வாங்கிக்கொண்டு சிட்டி இனி உங்களுக்கு பிஏ-வால் எந்த பிரச்சனையும் வராது. தைரியமா இருங்க என்கிறார். பின் நம்பிக்கையுடன் ரோகிணியும், வித்யாவும் அங்கிருந்து சென்றுவிடுகின்றனர்.
அவர்கள் போனதும் உள்ளே ஒளிந்திருக்கும் பிஏ-வை பார்த்து ”2 லட்சம் கொடுத்துட்டா. அவ எனக்கு கெடச்ச தங்க முட்டை.. உடனே அறுக்காம வளத்து அப்பப்போ தேவப்படும்போது யூஸ் பண்ணிக்கனும்” என்கிறார். பின் பிஏ-வுக்கான ஷேர் கொடுத்து நம்ம டீல் முடிஞ்சிது என அனுப்பிவிடுகிறார்.
அடுத்ததாக மனோஜ் புதிதாக சேர்ந்து பிசினஸ் தொடங்கப்போகும் சந்தோஷி கால் செய்து பிசினஸ் விஷயமா கொஞ்சம் பேசனும் என்கிறார். பின் பிசினஸை விரிவுபடுத்த விளம்பரம் செய்ய வேண்டும்.
அதற்கு உங்க ஷோரூமிலேயே உங்க குடும்பத்தினர் அனைவரையும் நடிக்க வைத்து செய்யலாம் என்கிறார். இதற்காக ஒவ்வொரு ஜோடிக்கும் 50 ஆயிரம் பணம் தருகிறேன் என்கிறார். இதற்காக மனோஜ் அக்கவுண்டில் 2 லட்சம் பணம் போட்டுவிடுகிறார்.
ஆனால் இதை மனோஜ் பணம் கொடுத்த விஷயத்தை குடும்பத்தினரிடமிருந்து மறைத்துவிடுகிறார். குடும்பத்தினரிடம் விளம்பரம் எடுப்பது குறித்து பேசுகிறார். எனவே என் பிசினஸ் வளர்ச்சிக்காக அனைவரும் நடித்துக்கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்.
ஆனால் வீட்டில் அனைவரும் தயங்குகின்றனர். பின் முத்து, ”எங்க பொழப்பையெல்லாம் விட்டுட்டு நடிக்கவறோம் எங்களுக்கு எவ்வளவு கொடுப்ப” என்று கேட்கிறார். இதை கேட்ட மனோஜ் திருதிருனு முழுக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
நாளைய எபிசோட் புரோமோவில் மனோஜ் அவர்களை ஒருவழியாக ஒத்துக்கொள்ள வைக்கிறார். பின் ஷூட்டிஙின் போது டைரக்டரிடம் ”சும்மா ஓசில நடிச்சு கொடுக்க வந்தா ஓவரா வேலை வாங்குற” என முத்து கோபப்பட்டு சண்டை போடுகிறார்.
அப்போது டைரக்டர், ”சந்தோஷி சார் உங்க ஒவ்வொருவருக்கும் 25 ஆயிரம் கொடுத்துள்ளார்” என உண்மையை போட்டு உடைக்கிறார். இதை அறியும் குடும்பத்தினர் என்ன செய்ய போகிறார்கள் என்பது நாளைய எபிசோடில்தான் தெரிய வரும்.