‘டான்’ படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி திருமணம்.. பொண்ணு யாரு தெரியுமா?
இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் இயக்குநர் அட்லீயிடம் உதவியாளராகப் பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டான் திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் ரூ. 100 கோடிக்கு வசூல் செய்தது.
இந்நிலையில் இயக்குநர் சிபி சக்ரவர்த்திக்கும் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள பிளாட்டினம் மஹாலில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 4, 2024) வரவேற்பு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து நேற்று காலை (செப்டம்பர் 5, 2024) திருமணமும் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். நடிகர்கள் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் அட்லீ, தர்ஷன், இயக்குநர்கள் ரவிக்குமார், பாக்யராஜ் கண்ணன், பாடலாசிரியர் விவேக், தயாரிப்பாளர் சுதன், லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன், எஸ்கே புரொடக்ஷன்ஸ் கலை, தயாரிப்பாளர் சாந்தி டாக்கீஸ் அருண், முனீஷ்காந்த், பிக்பாஸ் ராஜு, இயக்குநர் விக்னேஷ் ராஜா, இயக்குனர் விஷால் வெங்கட், பால சரவணன், காளி வெங்கட், மிர்ச்சி விஜய், சிவாங்கி உட்பட பலர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, சிவகார்த்திகேயன் உட்பட தன் நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி வைத்திருந்தார். அந்தப் புகைப்படங்கள் வைரலாகின. இந்நிலையில், தற்போது அவரது திருமணம் நடந்துமுடிந்துள்ளது. இந்தப் புகைப்படங்களும் தற்போது வைரலாகிவருகிறது.