பேஜரை தொடர்ந்து அடுத்தடுத்து வெடித்து சிதறிய வாக்கி டாக்கிகள்.. பீதியில் லெபனான் மக்கள்!

following-the-pagers-walkie-talkies-exploded-in-lebanon-today
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-18 21:37:00

இஸ்ரேல் - பாலஸ்தீன் போர் நடந்துவரும் நிலையில், நேற்று (17ம் தேதி) பிற்பகல் 4 மணியளவில் லெபனானில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திவந்த 1000 பேஜர்கள் அடுதடுத்து வெடித்தது. இதில், 12 பேர் பலியானர், 2800 பேர் காயமுற்றனர். இதில், 200 பேர் பயங்கர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில், ஈரான் தூதர் முஜூதாபா அமானி காயமடைந்தார். அதேபோல், ஹிஸ்புல்லா பிரதிநிதி அலி அம்மாரின் மகன் கொல்லப்பட்டார். இந்நிலையில், இந்த சதிச்செயல் நன்கு திட்டமிடப்பட்டு பல மாதங்களுக்கு முன்பே தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் இந்த சதித்திட்டத்தை தீட்டியிருக்கலாம் எனவும் குற்றச்சாட்டப்படுகிறது.

பேஜர்களை தயாரிக்கும் போதே, இஸ்ரேல் உளவாளிகளின் உதவியுடன் அதில் வெடிபொருள் வைக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்கேனர் உள்ளிட்ட எந்த கருவியாலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இது வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும், ரகசிய குறியீடு மூலம் பிசிபி ஃபோர்டு இயங்க தொடங்கிய சில நொடிகளில் வெடிமருந்து பேட்டரியுடன் சேர்ந்து வெடிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (18ம் தேதி) மீண்டும் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திவந்த வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியுள்ளன. இதில், இதுவரை மூன்று நபர்கள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்னும் எத்தனை வாக்கி டாக்கிகள் வெடித்தன என்பன தகவல் வெளியாகவில்லை. அதேபோல், சில இடங்களில் டெலிபோன்களும் வெடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வாக்கி டாக்கிகளும் பேஜர் வாங்கிய காலகட்டத்திலே வாங்கப்பட்டது என சொல்லப்படுகிறது.

தொடர்ந்து லெபனானில் இப்படியான தாக்குதல் சம்பவம் நடைபெறுவதால் அந்த நாட்டு மக்கள் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ads
Recent International News
Trending News
Recent News
Prev
Next