முடிவுக்கு வரும் 75 ஆண்டுகால பயணம்... மூடப்படும் பிரபல அமெரிக்க நிறுவனம்!

tupperware-decide-to-file-bankruptcy-due-to-loss-and-debt
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-18 21:00:00

அமெரிக்காவில் 1946ம் ஆண்டு துவங்கப்பட்ட டப்பர்வேர் நிறுவனம் தனது 75 ஆண்டுகால பயணத்தை முடிக்க உள்ளது.

அமெரிக்க நிறுவனமான டப்பர்வேர், காற்று புகாத சமையல் பாத்திரங்கள், டிஃபன் பாக்ஸ்கள் தயாரிப்பதன் மூலம் பெரும் புகழ்பெற்றது. இந்த நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பே உயர்ந்த இடத்தில் உள்ளது. அமெரிக்க நிறுவனமானாலும், இந்தியாவில் பெரும் புகழ் பெற்றது. இந்தியாவில் குறிப்பாக நடுத்தர குடும்பங்களிலும், பெண்கள் மத்தியிலும் மிகவும் நெருக்கமான நிறுவனம்.

இந்நிறுவனம், பெண் முகவர்கள் மூலம் 75 ஆண்டுகளாக உலகமெங்கம் தனது தயாரிப்புகளை வெற்றிகரமாக சந்தைப்படுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பிரபலமான நிறுவனத்தையும் கொரோனா தான் சாய்த்ததாக சொல்லப்படுகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு 2020ம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்திற்கு கடன் அதிகரித்து விற்பனையும் சரிவை சந்தித்துவருகிறது.

1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு வைத்துள்ள டப்பர்வேர் நிறுவனம், 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது கடனில் இருந்து மீள முடியாமல் திவால் நோட்டீஸை அமெரிக்காவின் டெலவேர் நீதிமன்றத்தில் அளித்துள்ளது.

கடனை அடைக்க, முதலீடு செய்ய பல நிறுவனங்கள் முன்வந்துள்ள போதிலும், சந்தையில் பெரியளவு வரவேற்பு இல்லாததால் நிறுவனத்தை மூடும் முடிவில் டப்பர்வேர் உறுதியாக உள்ளது.  டப்பர்வேர் நிறுவனம் திவால் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அதன் தாக்கம் அமெரிக்க பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது.

Ads
Recent International News
Trending News
Recent News
Prev
Next