கூட்டத்தையே சிரிக்க வைத்த இளைஞர்... அப்படி என்ன செய்தார் தெரியுமா?

the-young-man-who-made-the-crowd-laugh-do-you-know-what-he-did
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-06-26 19:05:00

விவசாயி ஒருவர் செய்த செயலால் கூட்டமே விழுந்து விழுந்து சிரித்த சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பலர் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்து வந்தனர். அப்போது அங்கு வந்த விவசாயி ஒருவர் ஒரு மனுவை கலெக்டரிடம் வழங்கினார். அதனை வாங்கி பார்த்த விவசாயி சிரிக்க ஆரம்பித்தார்.

அந்த மனுவில் தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் மணப்பெண் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த விவசாயி கூறியிருந்தார். இதனை சற்றும் எதிர்பாராத மாவட்ட ஆட்சியர் அவரது மனுவை வாங்கிப்படித்து நகைத்தார். இதேபோல் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்துக்கு வந்த அனைவரும் நகைத்தனர்.

மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெண் கேட்டு விவசாயி கொடுத்த மனுவை படித்து பார்த்து ஆட்சியர் சிரித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Ads
Recent National News
Trending News
Recent News
Prev
Next