ரியல்மீ GT 7 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக ப்ரீ-புக்கிங் தொடங்கியது!
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்ட ரியல்மீ GT 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 26ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்பது அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முன்பதிவுகள் அறிமுகத்திற்கு முன்பே தொடங்கிவிட்டன. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்கள் மூலம் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்பவர்களுக்கு ஸ்கிரீன் டேமேஜ் இன்சூரன்ஸ், உடனடி தள்ளுபடிகள், நீட்டிக்கப்பட்ட வாரண்டி, பல கட்டணத் திட்டங்கள் போன்ற விருப்பங்களும் உள்ளன.
ரியல்மீ GT 7 ப்ரோ முன்பதிவு சலுகைகள்:
இந்த போனை முன்பதிவு செய்தால், நிறுவனம் பல சலுகைகளை வழங்குகிறது. அமேசானில் ரூ.1,000 மற்றும் ஆஃப்லைன் சேனல்களில் ரூ.2,000 செலுத்தி இந்த போனை முன்பதிவு செய்து கொள்ளலாம். இது தவிர, இந்த ஸ்மார்ட்போனை வாங்கும்போது வங்கி சலுகைகள் மூலம் ரூ.3,000 வரை சலுகையையும் பெறலாம். இந்த ஸ்மார்ட்போனை வாங்கும்போது 12 மாதங்கள் மற்றும் 24 மாதங்களுக்கு கட்டணமில்லா EMI விருப்பமும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்தவர்களுக்கு 24 மாதங்கள் அதாவது இரண்டு வருட வாரண்டி மற்றும் ரூ.6,598 மதிப்புள்ள ஸ்கிரீன் டேமேஜ் இன்சூரன்ஸ் கிடைக்கும்.
ரியல்மியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். அதாவது முன்பதிவு செய்யும்போது ரியல்மீ VIP ப்ரோ பிளஸ் மெம்பர்ஷிப்பும் கிடைக்கும். மேலும், இலவச ஷிப்பிங், இயர்லி அக்சஸ், காயின்ஸ் ரிடெம்ப்டின் மற்றும் பிற ஆஃப்லைன் பலன்களும் கிடைக்கும். இது தவிர, ரூ.3,299 மதிப்புள்ள ரியல்மீ பட்ஸ் ஏர் 6-ஐ ரூ.2,499க்கு தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
ரியல்மீ GT 7 ப்ரோ விவரக் குறிப்புகள்:
ரியல்மீ GT 7 ப்ரோ ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் 3 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பெண்ணுடன் (AnTuTu) இயக்கப்படுகிறது. இதில் 120 ஹெர்ட்ஸ் வரை ரெஃபிரேஷ் ரேட், 2600 ஹெர்ட்ஸ் சம்ப்ளிங் டச் ரேட், 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் போன்ற அம்சங்களும் உள்ளன. இது சமீபத்தில் சந்தையில் குவால்காம் அறிமுகப்படுத்திய ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போனில் 1 TB வரை UFS 4.0 சேமிப்பு மற்றும் 16 GB வரை LPDDR5X ரேம் வழங்கப்பட்டுள்ளது. ரியல்மீ GT 7 ப்ரோ ஆனது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ரியல்மீ UI 6.0 ஓஎஸ் மூலம் இயங்குகிறது.
கேமராக்கள் பொறுத்தவரையில், ரியல்மீ GT 7 ப்ரோ போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. அதாவது 50 மெகாபிக்சல் சோனி IMX906 பிரைமரி சென்சார், 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் ஷூட்டர், 3x ஆப்டிகல் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் ஆதரிக்கும் 50 மெகாபிக்சல் Sony IMX882 பெரிஸ்கோபிக் டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கும். மற்றும் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக இந்த போனில் 16 மெகாபிக்சல் பிரன்ட் சென்சார் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது நீருக்கடியில் புகைப்படம் எடுத்தல், லைவ் போட்டோஸ் மற்றும் AI ஆதரவு எடிட்டிங் போன்ற அம்சங்களுடன் வருகிறது.
Realme GT 7 Pro ஆனது 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்ட 6500 mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. பாதுகாப்பு பொறுத்தவரையில், இன்-டிஸ்ப்ளே அல்ட்ரா சோனிக் பிங்கர்பிரின்ட் சென்சார் மூலம் போனை அன்லாக் செய்யலாம். இதில் தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்கான IP69 மதிப்பீடு கொண்டுள்ளது. மேலும் இதில் 5G, டூயல் 4G Volte, வை-பை 7, ப்ளூடூத் v5.4, GPS, Galileo, Baidu, QZSS, NFC, USB டைப்-C போர்ட் போன்ற இணைப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.