தாவரங்கள் மீதான காதலை வணிகமாக மாற்றிய அமெரிக்கப் பெண், ஆண்டுக்கு ரூ. 1 கோடி வருமானம்!
அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் செடிகள் மீது கொண்ட காதலால் மட்டுமே ஆண்டுக்கு பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார். செடிகள் என்றால் அவருக்கு ரொம்ப பிடிக்கும். அவரின் வீட்டில் எங்கு பார்த்தாலும் செடிகள் தான் இருக்கும். வீட்டை அலங்கரிக்கும் விதமாக தொடங்கிய ஒரு பொழுதுபோக்கு, தற்போது வியாபாரத்தை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. வீட்டில் செடிகளை வளர்த்து, விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இந்தத் தாவரத் தொழிலில் யார், எங்கே, எப்படி, எவ்வளவு சம்பாதித்தார்கள் என்பதை பற்றி விரிவாகப் பார்ப்போம்.
அமெரிக்காவை சேர்ந்த 44 வயதான லீனா பெட்டிக்ரூ, தனியார் நிறுவனத்தில் ஐடி ஊழியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு செடிகள் என்றால் உயிர், எனவே அவரது வீட்டில் விதவிதமான செடிகளை வளர்க்கிறார். அவருடைய பொழுதுபோக்கு அதோடு நிற்கவில்லை, இதை தொழிலாக மாற்றினார். ஒரு சில மாதங்களில் அவர் வீட்டு தாவரங்களை விற்று பெரும் லாபத்தை சம்பாதித்த அவர், ஒரு வருடத்தில் சுமார் $148,600 (தோராயமாக ரூ. 1.25 கோடி) சம்பாதித்து வருகிறார்.
லீனா இந்த தாவர வணிகத்தை முதன்முதலில் 2017 ஆம் ஆண்டு தொடங்கினார், ஆனால் அது தோல்வியடைந்தது. கோல்டன் பொத்தோஸ் செடிகளை வைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தபோது, அந்த செடிகளை அவளால் பராமரிக்க முடியவில்லை. ஆனால் 2022 ஆம் ஆண்டில், ஹூஸ்டனில் தங்கள் வீட்டைப் புதுப்பிக்கும் போது, லீனாவும் அவரது கணவரும் மீண்டும் தாவரங்களை வளர்க்கத் தொடங்க முடிவு செய்தனர். காலம் செல்லச் செல்ல.. தாவரங்களின் மீதான ஆர்வம் அவர்களின் வியாபாரத்தை இரட்டிப்பாக்கியது. இதனையடுத்து அவர்கள் 8 அடி உயரமுள்ள மான்ஸ்டெரஸ் செடி உட்பட வீடு முழுவதும் பலவிதமான செடிகளை வளர்த்தனர்.
தாவரங்களை வளர்த்து, லீனா பெட்டிக்ரூ அவற்றை ஆன்லைன் சந்தையான பாம்ஸ்ட்ரீட்டில் விற்க முடிவு செய்தார். ஜூன் 2023 இல் அவர் நேரடி ஸ்ட்ரீம் ஏலங்களை நடத்தத் தொடங்கினார். அங்கு அவர் தாவரங்களை விரும்பும் பார்வையாளர்களுக்கு தனது தாவரங்களைக் காட்டுகிறார். ஜூலை 2024 நிலவரப்படி, பெட்டிக்ரூ தனது வணிகத்திலிருந்து மாதத்திற்கு சராசரியாக $12,380 (அதாவது தோராயமாக ரூ.10.45 லட்சம்) சம்பாதித்தார்.
IT இல் முழுநேர வேலை செய்தாலும் பெட்டிக்ரூ $90,000 மட்டுமே சம்பாதித்தார். ஆனால் செடி வியாபாரத்தில் வாரத்தில் 20 மணி நேரம் மட்டுமே செலவிட்டாலும் அவர் ரூ.1 கோடிக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார். செடிகளை வாங்குவது முதல் விற்பது மற்றும் அனுப்புவது என அனைத்தையும் அவர், கேரேஜாக மாற்றிய கிரீன்ஹவுஸில் செய்கிறார். மேலும் இவர் வாடிக்கையாளரின் கோரிக்கையை நிறைவேற்ற ஐந்து ஒப்பந்த தொழிலாளர்கள் பணியமர்த்தியுள்ளார். எனவே வியாபாரத்திற்காக தனது கிரீன்ஹவுஸில் ஒரே நேரத்தில் 1,000 செடிகள் வரை வைத்து பறித்து வருகிறார்.
இவரது செடிகளின் விலை 30 டாலர்கள் அதாவது ரூ. 2,500 முதல் 115 டாலர்கள் அதாவது சுமார் ரூ. 9,700 வரை ஆகும். இவரது தொழிலில் லாபம் நன்றாக இருக்கிறது, எனவே பெட்டிக்ரூ தனது தாவர வியாபாரத்தில் தன்னை முழுநேரமாக அர்ப்பணிக்க முடிவு செய்தார். அதற்காக ஆட்டோ கடையை விற்றுவிட்டு புளோரிடா செல்ல திட்டமிட்டுள்ளார். மேலும், அவர் அங்கு சொந்தமாக பசுமை இல்லத்தைத் திறக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு உள்ளது.