Jio 8th Anniversary Offer : குறைந்த விலையில அதிக சலுகைகள்... வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களை அள்ளி வழங்கும் ஜியோ
8 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் ஆஃபர்களை அள்ளி வழங்கியுள்ளது. குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த ஆஃபர் இருக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் அதனை பெறுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான ஜியோ, 2015 டிசம்பர் மாதம் 27 அம் தேதி தொடங்கப்பட்டது. இருப்பினும், அதன் பொது சேவை 2016 செப்டம்பர் 5 ஆம் தேதி ஆரம்பமானது. இன்றைக்கு சுமார் 45 கோடி வாடிக்கையாளர்களுடன் இந்தியாவின் மிகப்பெரும் தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக ஜியோ மாறியுள்ளது.
இந்நிலையில் ஜியோவின் 8 ஆவது ஆண்டுவிழாவையொட்டி ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 5 ஆம் தேதியான இன்று முதல் 10 ஆம் தேதி வரை இந்த ஆஃபர் செயல்பாட்டில் இருக்கும். இதன்படி, ரூ. 899, ரூ. 999 மற்றும் ரூ. 3599-க்கு ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ. 700 வரையில் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ரூ. 899 மற்றும் ரூ. 999-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10 ஓடிடி தளங்களில் ஒரு மாதத்திற்கான சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் 10 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும்.
இவற்றில் 10 ஜிபி டேட்டா மட்டும் ரூ. 175 மதிப்புடையது. இதேபோன்று ரூ. 2999 க்கு மேல் ரீசாஜ் செய்வோருக்கு ஜொமேட்டோவின் 3 மாதத்திற்கான கோல்ட்டு மெம்பர்ஷிப் இலவசமாக வழங்கப்படும். அத்துடன் ஆஜியோவில் பர்சேஸ் செய்யும் போது ரூ. 500-க்கான வவுச்சர் வழங்கப்படும்.
ரூ. 899 ப்ளானில் நாள்தோறும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் 90 நாட்களுக்கும், ரூ. 999 ப்ளானில் இதே வசதி 98 நாட்களுக்கும் வழங்கப்படுகிறது. ரூ. 3599 ப்ளானில் நாள் ஒன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா அன்லிமிட்டெட் கால் வசதி 365 நாட்களுக்கு அளிக்கப்படுகிறது.