Union Budget 2024-25 : ஒரு ரூபாயில் நாட்டின் வரவு மற்றும் செலவு எவ்வளவு? - விவரம் இதோ

budget-2024-highlights-sitharaman-announces-big-tax-tweaks-jobs-incentives-nps-schemes-and-bonanza-for-bihar-and-andhra
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-07-23 15:49:00

மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை ஒரு ரூபாயில் வரவு மற்றும் செலவு என்ற அடிப்படையில் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

மத்திய அரசின் வருவாயைப் பொருத்தவரை ஒரு ரூபாயில், கடன் மூலம் 27 காசுகள் அரசுக்கு கிடைக்கிறது. அடுத்ததாக வருமான வரியாக 19 காசுகள் கிடைக்கின்றன. ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகள் மூலம் 18 காசுகளும், பெருநிறுவன வரியாக 17 காசுகளும், வரி அல்லாத வருவாயாக 9 காசுகளும் வருவாயாக கிடைக்கின்றன.

மத்திய கலால் வரியாக 5 காசுகளும், சுங்க வரியாக 4 காசுகளும், கடன் அல்லாத மூலதன வருவாயாக ஒரு காசும் கிடைக்கிறது.

மத்திய அரசின் செலவை பொறுத்தவரையில் ஒரு ரூபாய் அடிப்படையில் அதிகபட்சமாக மாநிலங்களுக்கான நிதிப் பங்கீடாக 21 காசுகளும், வட்டிக்கு 19 காசுகளும் செலவாகின்றன. ராணுவம் அல்லாத மத்திய அரசு திட்டங்களுக்கு 16 காசுகளும், இதர செலவுகள் மற்றும் நிதி ஆணைய பரிவர்த்தனைகளுக்காக தலா 9 காசுகளும் செலவழிக்கப்படுகின்றன. இதை தவிர ராணுவத்திற்கு 8 காசுகளும், மானியத்திற்கு தலா 6 காசுகளும் செலவழிக்கப்படுகின்றன.

Ads
Recent Business News
Trending News
Recent News
Prev
Next