Formula 4 Car Race: சென்னையில் கார் ரேஸ் நடைபெறும் தேதி அறிவிப்பு : டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

chennai-to-witness-formula-4-racing-on-aug-31-and-sept-1
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-20 18:23:00

சென்னையில் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் நவம்பர் 1-ம் தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில், ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 பந்தயம், சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டது. இந்த போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, சாலைகள் மேம்படுத்தப்பட்டன.

ஆனால், மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக ஃபார்முலா 4 கார்பந்தயம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இப்போட்டியை நடத்த தடை கோரிய வழக்கில், தீவுத்திடல் பகுதியில் இப்போட்டியை நடத்த தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், இருங்காட்டுக்கோட்டையில் போட்டியை நடத்திக்கொள்ள பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.

இந்நிலையில், இந்தியாவில் ஐபிஎல் பாணியில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு, டெல்லி உட்பட ஏழு அணிகள் பங்கேற்கின்றன. கொல்கத்தா அணியின் உரிமையை சவுரவ் கங்குலி கைப்பற்றியுள்ளார். ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கி ஐந்து சுற்றுகளாக நவம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில், சென்னையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் ஒன்று ஆகிய இரண்டு நாட்கள் இரவு நேரத்தில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்காசியாவிலேயே முதன் முறையாக இரவு நேர கார் பந்தயம் என்பதால் இந்த போட்டிக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பலர் கலந்து கொள்வதால் இந்த போட்டியை காண ஏராளமான மக்கள் ஆர்வமாக  உள்ளனர்.

இந்த போட்டிக்கான டிக்கெட் கட்டணமாக பிரீமியம் ஸ்டாண்ட் பகுதிக்கு முதல் நாள் டிக்கெட் கட்டணமாக ரூபாய் 3999-ம், இரண்டாம் நாளுக்கான கட்டணமாக ரூபாய் 6,999-ம் வசூலிக்கப்படுகிறது. இதுபோக கிராண்ட் ஸ்டாண்ட் கட்டணமாக முதல் நாளுக்கு ரூ.1,999-ம் கடைசி நாளுக்கான கட்டணமாக ரூ.2,599 வசூலிக்கப்படுகிறது. இது போக கோல்டன் லாஞ்ச் என்ற ஸ்டாண்டில் முதல் நாள் டிக்கெட் கட்டணமாக ரூபாய் 7,999 மற்றும் இரண்டாம் நாள் டிக்கெட் கட்டணமாக ரூபாய் 13,999 வசூலிக்கப்படுகிறது.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next