நகரங்கள் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

neet-ug-2024-result-live-nta-declares-city-and-center-specific-results-direction-by-supreme-court
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-20 18:12:00

இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 750 தோ்வு மையங்கள், வெளிநாடுகளில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்கள் ஆகியவற்றில், நீட் தோ்வை 23 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதினா்.

தோ்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக பிகாா், உத்தரப்பிரதேசத்தில் உள்ள தோ்வு மையங்களில் வினாத்தாள் கசிந்தது பெரும் சா்ச்சையானது. இதேபோல் கருணை மதிப்பெண் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனைத்தொடர்ந்து, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் தொடர்ந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் முறைகேட்டால் எவ்வளவு மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்பதை கண்டறியும் வகையில் நகரங்கள் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவை இன்று நண்பகலுக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

Trending News
Recent News
Prev
Next