கனமழையால் தத்தளிக்கும் மும்பை: கட்டிடம் இடிந்து விழுந்து பெண் பலி

heavy-rain-in-mumbai-causes-traffic-chaos-andheri-subway-flooded
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-07-20 16:53:00

மும்பை,

மும்பையில் பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக நகரில் பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் 3-வது நாளாக இன்றும் மும்பையில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக அதிகாலை நேரத்தில் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை இடைவிடாமல் பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.

கடந்த 3 நாட்களாக நகரில் பெய்த பலத்த மழை காரணமாக இன்று காலை 11 மணியளவில் கிரான்ட் ரோடு ரெயில் நிலையம் அருகே ரூபின்னிசா மன்சில் என்ற பழமையான 4 மாடி கட்டிடத்தின் பால்கனி பகுதி இடிந்து விழுந்தது. 2, 3-வது மாடியின் பால்கனி, சிலாப் பகுதிகள் முழுமையாக இடிந்தன. தரை, 4-வது மாடி பால்கனி பகுதி இடிந்து விழுந்தது. சில கட்டிட பகுதிகள் ஆபத்தான நிலையில் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்தது.

கட்டிடத்தில் சிக்கியவர்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் சிக்கி கொண்டனர். கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் இருந்ததால் அவர்கள் பதற்றத்தில் உதவிக்காக தவித்து நின்றனர். மேலும் பால்கனி இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கட்டிடத்தில் சிக்கி இருந்த 20 பேரை தீயணைப்பு படையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். கட்டிடம் இடிந்த சம்பவம் காரணமாக கிரான்ட் ரோடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News
Recent News
Prev
Next