நம்ம ஊர்ல தரமான திரையரங்கம் ரெடி... டெல்டா சினிமா ரசிகர்களுக்கு இனிமே ட்ரீட் தான்‌‌...

cinema-epiq-multiplex-theatre-opens-in-tanjavur-with-advanced-technology-adn-pdp-local18-ws-b
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-12-21 10:16:00

இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரே திரையரங்கில் 2 EPIQ திரைகளைக் கொண்ட பிரமாண்ட திரையரங்கம் தஞ்சையில் துவங்கப்பட்டுள்ளது. அது என்ன EPIQ திரையரங்கு? என்பது பற்றியும், தஞ்சையில் முதன்முதலாகத் திறக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட திரையரங்கின் சிறப்பம்சங்களைப் பின்வருமாறு பார்க்கலாம்.

ஒரு காலத்தில் தஞ்சையில், சினிமா திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. 1940-ல் இருந்து 1980 வரை தஞ்சையில் கிட்டத்தட்ட 15 சினிமா கொட்டகைகள் வந்துவிட்டன. இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இதில் பல தியேட்டர்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போது “இரண்டே.! இரண்டு!” திரையரங்குகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

நல்ல திரை அனுபவமும் திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்குமா என சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது தஞ்சை மட்டுமல்லாமல் டெல்டா மக்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக க்யூப் மற்றும் வெற்றி ஈ ஸ்கொயர் சினிமாஸ் இணைந்து தஞ்சை புதிய பேருந்து நிலையம் பின்புறம் 3 திரைகள் கொண்ட திரையரங்கைக் கொண்டு வந்துள்ளது. அதில் 2 எபிக் திரை வசதி கொண்ட இரண்டு அரங்குகளை அறிமுகம் செய்துள்ளனர். அதுவும் இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு திரையரங்கில் இரண்டு எபிக் திரைகள் உள்ளது திரையரங்கு இதுதான் எனக் கூறுகின்றனர்.

எபிக் என்பது தட்டையான, பெரிய திரையின் பிரமாண்டம், பிரகாசமான சுற்றுப்புறம் மற்றும் ஸ்டேடியம் இருக்கைகள் ஆகியவற்றைக் கொண்டதாகும். ஒவ்வொரு இருக்கையும் சிறந்த பார்வை அனுபவத்திற்காக மேம்படுத்தப்பட்டிருக்கும். முக்கியமாக வண்ணமயமான 4K RGB லேசர் ப்ரொஜெக்ஷன், Dolby Atmos-ன் மிகவும் துல்லியமான ஈர்க்கக்கூடிய இசை, அதிநவீன தொழில் நுட்பங்களுடன் திரை மற்றும் ஒலியில் அதிகப்பிரகாசம், அதோடு படத்தின் நகர்வு கூர்மையாகவும் வேகமானதாகவும் இருக்கும். எபிக் திரையரங்கில் இயக்குவதற்காகவே திரைப்படங்கள் மெருகூட்டப்படும். இதனால் பார்வையாளர்கள் புதிதான சினிமா அனுபவங்களை இணையற்ற தரத்தில் பார்க்க முடியும்.

இது போன்ற பல்வேறு தொழில்நுட்ப வேலைகளையும், படங்களை திரையரங்கில் திரையிடத் தேர்ந்தெடுக்கும் வேலைகளையும் க்யூப் நிறுவனம் செய்து வருகிறது. அந்த வகையில் தஞ்சையில் திறக்கப்பட உள்ள இந்த திரையரங்கில் உள்ள முதல் திரை 65 அடி அகலமும் 34 அடி உயரமும், இரண்டாவது திரை 61 அடி அகலமும் 32 அடி உயரமும் கொண்ட இரண்டு பிரமாண்ட திரையைக் கொண்டுள்ளது. இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த திரையரங்கில் அதிகபட்சமாக டிக்கெட் விலை ரூ. 250 எனவும், பார்க்கிங் அதிகபட்சமாக 50 எனவும், திரையரங்கம் இந்த மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next