Siragadikka Aasai | ரோகிணி கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் விஜயா.. ஷாக் ஆகி நிற்கும் மனோஜ்.!

television-siragadikka-aasai-today-episode-21-12-2024-vijaya-grabs-rohini-by-the-neck-and-pushes-her-out-manoj-stands-in-shock
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-12-21 08:09:00

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் மனோஜ் வீடு வாங்க தேவைப்படும் 70 லட்சம் பணத்தை ரவியின் மாமனாரிடம் கடனாக கேட்க சொல்கிறார். இதை கேட்டதும் ரவி, எனகாகவே நான் என் மாமனார் கிட்ட போய் நின்னது கிடையாது என்னால கேட்க முடியாது என கோபத்தோடு திட்டிவிடுகிறார். உடனே மனோஜ் நான் வீடு வாங்குவது எல்லோருக்கும் பொறாமை, தெரியாம இந்த குடும்பத்துல பொறந்துட்டேன் என சொல்கிறார்.

பின் ரோகிணியிடம் உன் அப்பா மட்டும் வெளிய இருந்திருந்தா இவங்க யார் கிட்டையும் நான் நிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவர் வரட்டும் அப்போ இருக்கு எல்லோருக்கும் எறு சொல்ல ரோகிணி அப்படியே திகைத்து பார்க்கிறார்.

அடுத்ததாக முத்துவும் மீனாவும் நீச்சல் குளம் இருக்கும் இடத்தில் நடந்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது முத்து இந்த வீடு புடிச்சிருக்கா என்று கேட்க சுத்தமா புடிக்கலை என்கிறார். ஏன் என்று முத்து கேட்க, வீடுதான் பெருசா இருக்கே தவிர இதுல இருக்க ஆளுங்களோட மனசு சின்னதா தான் இருக்கு எனக்கு சின்னதா அழகா இருந்தாலே போதும் என்கிறார்.

பின் ஸ்ருதி ரவி பெட்ரூமில் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது ரவியும் ஸ்ருதியிடம் வீடு புடிச்சிருக்கா என்று கேட்க பிடிக்கவில்லை எனக்கு அப்பார்ட்மெண்ட் வீடுதான் பிடிக்கும் என்கிறார். அங்குதான் சுத்தி ஆளுங்க இருப்பாங்க, ஜிம், பார்க், சூப்பர் மார்கெட் , பார்க்ல விளையாடுற குழந்தைங்க, பண்டிகை வந்தா ஒன்னா கொண்டாடுர கல்ச்சர் என கலர்புல்லா வாழுறதுதான் பிடிக்கும் என்கிறார்.

அடுத்ததாக ரோகிணி தூங்கிக்கொண்டிருக்கும்போது சடாலென விஜயா ரோகிணியை இழுத்துக்கொண்டு வெளியே வருகிறார். உன் மாமா கிட்ட பேசுறேன்னு அந்த வித்யா கிட்டதான பேசுன. என் கிட்டையே நடிக்கிறியா, பொய் சொல்லுறியா வீட்டை விட்டு வெளியே போ என்று தள்ள திடீரென விழித்துப்பார்த்தால் கனவு. இதை பார்க்கும் மனோஜ் பயந்துவிடுகிறார்.

அடுத்தநாள் காலை முத்து மனோஜின் முன்னாள் காதலியை சவாரிக்கு அழைத்துக்கொண்டு போகிறார். அப்போது என்னை 2 ஃபிராடுகள் 30 லட்சம் கேட்டு ஏமாத்திட்டாங்க. நானும் குடுத்துட்டேன் என்று சொல்ல அத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. திங்கள் கிழமை எபிசோடில் நிச்சயம் பரபரப்பான கதைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next