'இதனால்தான் 'கேம் சேஞ்சர்' படத்திற்கு ராம் சரணை தேர்ந்தெடுத்தோம்' - இயக்குனர் ஷங்கர்
சென்னை,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தியன் - 2 படத்தின் எதிர்மறையான விமர்சனங்களைத் தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளநிலையில், இப்படத்தில் ராம் சரணை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'கேம் சேஞ்சர் படத்தில், ராம் சரண் கதாநாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர் தில் ராஜு கருதினார். எனக்கும் அது சரியாக தோன்றியது. ஆழமான நடிப்பைக் கொடுக்கக்கூடியவர் ராம் சரண். எந்த வகையான கதையாக இருந்தாலும் சரி, அதை அவர் அழகாக கையாள்வார்' என்றார்.