'கார்த்தி 29' படத்தின் படப்பிடிப்பு அப்டேட்

karthi-29-movie-shooting-update
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-12-18 13:48:00

சென்னை,

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. காதல், கமர்ஷியல், ஆக்சன் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திரைப்படங்களில் கார்த்தி நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன், விருமன், சர்தார்' ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மெய்யழகன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது சூர்யாவின் 'கங்குவா' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வில்லனாக தோன்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதற்கிடையில், நடிகர் கார்த்தி அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' படத்திலும், '96'படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இவர் டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'கார்த்தி 29' என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்க உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் இந்த படம் 2025-ம் ஆண்டு வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது 'கார்த்தி 29' படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next