உங்க லோன் அப்ளிகேஷனை ரிஜெக்ட் பண்ணிட்டாங்களா…? அப்படின்னா அடுத்து நீங்க இத தான் பண்ணனும்!!!
ஒரு லோன் நிராகரிக்கப்படுவது என்பது மிகவும் வருத்தமளிக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கலாம். ஆனால் இதுவே முடிவு கிடையாது. உங்களுடைய விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதை புரிந்து கொண்டு எதிர்காலத்தில் உங்களுடைய விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை நீங்கள் இன்னமும் கூட அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உங்களுடைய லோன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான ஒரு விரிவான வழிகாட்டுதலை இந்த பதிவில் பார்க்கலாம்.
நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை புரிந்து கொள்ளுதல்
முதல்படியாக, உங்களுடைய லோன் விண்ணப்பம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக கடன் வழங்குனர்கள் உங்களுடைய லோன் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களோடு அடங்கிய ஒரு கடிதம் அல்லது நோட்டீஸை உங்களுக்கு அனுப்புவார்கள். அதில் பின்வரும் பொதுவான காரணங்கள் இருக்கலாம்:-
குறைவான கிரெடிட் ஸ்கோர்
போதுமான வருமானம் இல்லாமை அல்லது நிலையற்ற வேலை
அதிக கடன்-வருமான விகிதம்
நிறைவற்ற அல்லது தவறான ஆவணங்கள் கிரெடிட் வரலாறு இல்லாமை
கிரெடிட் அறிக்கையை சரிபார்க்கவும்
உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் மற்றும் கிரெடிட் ரிப்போர்ட் ஆகியவை கடன் அங்கீகரிப்பதற்கான முக்கிய காரணிகள். ஒரு குறைவான கிரெடிட் ஸ்கோர் அல்லது உங்களுடைய கிரெடிட் அறிக்கையில் எதிர்மறையான குறிப்புகள் இருப்பது உங்கள் கடன் நிராகரிக்கப்பட்டதற்கான காரணமாக இருக்கலாம். உங்களுடைய இலவச கிரெடிட் ரிப்போர்ட்டை அங்கீகாரம் பெற்ற CIBIL அல்லது ஈக்விஃபேக்ஸ் போன்ற ஏஜென்சிகளிடமிருந்து நீங்கள் பெறலாம்.
உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவது ஒருவேளை உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் மீண்டும் ஒரு கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு அதனை மேம்படுத்துவதற்கான படிகளை மேற்கொள்ளுங்கள்.
ஒரு குறுகிய காலகட்டத்தில் பல லோன் விண்ணப்பங்கள் கிரெடிட் ஸ்கோரை குறைக்கலாம்.
நீண்ட கிரெடிட் வரலாறை பெறுவதற்கு பழைய கிரெடிட் அக்கவுண்டுகளை பராமரித்தல்
நிலுவையில் உள்ள கடன் தொகைகளை சரியான நேரத்தில் செலுத்துதல்
உங்களுடைய கிரெடிட் பயன்பாட்டு விகிதத்தை 30 சதவீதத்திற்கும் குறைவாக பராமரித்தல்
கடன் - வருமான விகிதத்தை ஆய்வு செய்தல்
பொதுவாக குறைவான கடன் - வருமானம் விகிதம் கொண்ட கடன் பெறுபவர்களையே கடன் வழங்குனர்கள் தேர்வு செய்வார்கள். ஏனெனில் இது பொருளாதார நிலைத்தன்மைக்கு உறுதி அளிக்கிறது.
உங்களுடைய டாக்குமென்ட்களை ஆய்வு செய்து அப்டேட் செய்யவும்
நிறைவற்ற அல்லது தவறான ஆவணங்கள் கடன் நிராகரிக்கப்படுவதற்கான ஒரு பொதுவான காரணமாக இருக்கலாம். எனவே உங்களுடைய அடையாள சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் வேலை விவரங்கள் அல்லது தொழில் சம்பந்தப்பட்ட சான்றிதழ் போன்றவை சரியாக இருக்கிறதா என்பதை ஒரு முறைக்கு இருமுறை உறுதிப்படுத்தவும்.
மாற்றுக்கடன் ஆப்ஷன்கள்
ஒரு கடன் வழங்குனர் உங்களுடைய கடனை நிராகரித்து விட்டால் நீங்கள் பிற வங்கிகள் அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை அணுகலாம்.
மேம்பாடுகளை செய்த பிறகு மீண்டும் கடனுக்கு விண்ணப்பிக்கவும்.
கடன் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை நீங்கள் பூர்த்தி செய்தவுடன் மீண்டும் அதே கடன் வழங்குனரிடம் கடனுக்காக விண்ணப்பிக்கலாம்.
தேவைப்பட்டால் நிபுணரின் உதவியைப் பெறுங்கள்
ஒருவேளை உங்களுடைய கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் ஒரு பொருளாதார ஆலோசகர் அல்லது கடன் ஆலோசகரை அணுகவும். அவர் நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவார்.