கன்னட இயக்குநர் குருபிரசாத் மர்ம மரணம்? - பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்பு!

cinema-famous-cinema-director-death-in-bengaluru-body-rescued-police-suspect-its-suicide
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-03 20:23:00

பிரபல சினிமா பட இயக்குனர் குரு பிரசாத் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். உயிரிழப்புக்கான காரணம் விசாரணையின் முடிவில் தெரியவரும் என அவர்கள் தெரிவித்தனர்.

கன்னட மொழியில் மட்டா, எட்டேலு மஞ்சுநாதா, டைரக்டர்ஸ் ஸ்பெஷல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் குருபிரசாத். இவர் நடிகராகவும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதேபோன்று படங்களுக்கு வசன கர்த்தாவாகவும் அவர் இருந்திருக்கிறார்.

இந்த நிலையில் அவரது உடலை போலீசார் அழுகிய நிலையில் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மீட்டுள்ளனர். கன்னட சினிமாவில் நன்கு அறியப்பட்டவரான குரு பிரசாத்தின் மரணம் திரைத் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்டமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்துள்ள குருபிரசாத்திற்கு கடன் சுமை அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் ரூ. 3 கோடி அளவுக்கு கடன் வாங்கியிருக்கலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் அவர் தொடர்ச்சியாக பல வீடுகளை மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடன் நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அவருடைய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு கொடுக்கவில்லை. அவர் இயக்கிய எட்டேலு மஞ்சுநாதா படத்தின் 2 ஆம் பாகம் உருவாக்கப்பட்டு 2 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இதனால் அவர் நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

மேலும் அவர் செக் பவுன்ஸ் வழக்கில் சிக்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் குரு பிரசாத் இருந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். இதேபோன்று குடும்ப பிரச்னையிலும் குரு பிரசாத் சிக்கியிருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 2 ஆவதாக ஒருவரை அவர் திருமணம் செய்திருந்தாலும், அவர் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது மரணம் குறித்து பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Ads
Recent Cinema News
Trending News
Recent News
Prev
Next