டிரம்ப் அரசிலும் இந்தியாவுக்கு கிடைக்கப்போகும் பெருமை.. இப்படி ஓர் 'சென்னை டச்' இருப்பது தெரியுமா?

who-is-usha-vance-indian-origin-wife-of-us-vice-president-elect-jd-vance
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-06 17:03:00

டொனால்டு டிரம்ப் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் நிலையில், அவரின் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த யாருமே இல்லையே என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு பதிலாக மாறியுள்ளார் அமெரிக்க துணை அதிபராக தேர்வாகியுள்ள ஜே.டி.வான்ஸின் மனைவி உஷா வான்ஸ்.

அமெரிக்காவில் ஜோ பைடன் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்ணாக கமலா ஹாரிஸ் இடம்பிடித்திருந்தார். இம்முறை டொனால்டு டிரம்ப் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் நிலையில், அவரின் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த யாருமே இல்லையே என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு பதிலாக மாறியுள்ளார் அமெரிக்க துணை அதிபராக தேர்வாகியுள்ள ஜே.டி.வான்ஸின் மனைவி உஷா வான்ஸ். பெயரிலேயே தெரிந்திருக்கும், உஷா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவரின் உண்மையான பெயர் உஷா சிலுகுரி.

யார் இந்த உஷா வான்ஸ்?: ஆந்திராவின் மேற்கு கோதாவரிக்கு அருகே இருக்கும் தனுகு என்ற பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள் உஷாவின் குடும்பத்தினர். ஆந்திரா தான் பூர்வீகம் என்றாலும், சென்னைக்கு இவர்கள் குடும்பம் இடம்பெயர்ந்து. உஷாவின் தாத்தா சென்னையில் பணியாற்றியவர். உஷாவின் அப்பாவோ சென்னையில் பிறந்து, வளர்ந்து, இங்கேயே படிப்பை முடித்தவர்.

அதன்பின் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ளார். அப்படியாக, உஷாவின் பெற்றோர் 1970களில் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான்டியாகோ பகுதியில் குடியேறினர். உஷா பிறந்து, வளர்ந்தது அனைத்தும் அமெரிக்காவில் தான். தற்போது உஷா, அமெரிக்காவின் தேசிய சட்ட நிறுவனத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்று பிரிவில் இளங்கலைப் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டமும் பெற்றவர் உஷா.

சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு சட்ட நிறுவனத்தில் கார்ப்பரேட் வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ள அவர், அமெரிக்காவின் தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் மற்றும் நீதிபதி பிரட் கவனாக் ஆகியோரிடம் கிளார்க்காக பணியாற்றியுள்ளார் உஷா வான்ஸ்.

உஷாவும், ஜே.டி.வான்ஸும் முதன்முதலில் யேல் சட்டக் கல்லூரியில் ஒரு விவாத நிகழ்ச்சியின்போது சந்தித்து கொண்டனர். இருவரும் காதல் வயப்பட, 2014ல் திருமணம் செய்துகொண்டனர். உஷா அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும், இந்து மதத்தை பின்பற்றி வருகிறார். இவர்களின் திருமணம் கூட இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. உஷா - ஜே.டி.வான்ஸ் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஜே.டி வான்ஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்றும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை உஷா சிலுகுரி வான்ஸ் பெற்றுள்ளார்.

ஜே.டி வான்ஸ் துணை அதிபராக தேர்தலில் போட்டியிட உஷா முக்கிய பங்காற்றியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜே.டி வான்ஸ் பின்னாடி இருந்து உஷா நிறைய பணிகளை செய்ததாக அவரை பாராட்டுகின்றன.

உஷாவின் சென்னை டச்: உஷாவின் உறவினர்கள் தற்போதும் சென்னையில் வசித்து வருகின்றனர். உஷாவின் அப்பாவுடன் பிறந்த பெண், அதாவது உஷாவின் அத்தை சாரதா சென்னையில் மருத்துவராக உள்ளார். தன்னுடன் உஷா இப்போதும் டச்சில் இருப்பதாக சாரதா தெரிவித்திருக்கிறார்.

ஜே.டி வான்ஸ் துணை அதிபர் வேட்பாளராக அறிவித்த உடனேயே உஷாவிடம் பேசி வாழ்த்துக்கள் தெரிவித்ததாக சாரதா பகிர்ந்துள்ளார்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next