சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி... அடையாறு வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு!

underwater-tunnel-from-greenways-road-to-adyar-for-chennai-metro-rails-phase-ii-project-ready
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-20 22:14:00

சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்தில் சுரங்கம் தோண்டும் இயந்திரம், பணியை முடித்து அடையாறு நிலையத்தை வந்தடைந்தது.

​சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை முழுவதும் 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களுடன் இரண்டாம் கட்ட திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது. ​வழித்தடம் 3-இல், கிரீன்வேஸ் நிலையத்திலிருந்து அடையாறு சந்திப்பு வரையிலான சுரங்கப்பாதை பணிகள் கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கின.

கிரீன்வேஸ் நிலையத்திலிருந்து அடையாறு சந்திப்பு நிலையம் வரையிலான சுரங்கப்பாதை பணிகள் பிப்ரவரி 2023-இல் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு சுரங்கப்பாதையின் நீளமும் 1228 மீட்டர் ஆகும். சுரங்கப்பாதைகள் அடையாறு ஆற்றின் கீழ் 300 மீட்டர் நீளத்திற்கு 10-13 மீட்டர் தரைமட்டத்திற்கு கீழ் செல்கின்றன. காவேரி மற்றும் அடையாறு என்ற இரண்டு பூமி அழுத்த சமநிலை  சுரங்கம் தோண்டும் இயந்திரகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளன. காவேரி சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு அடையாறு நிலையத்தை வந்தடைந்தது.

இந்நிலையில் காவேரி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து அடையாறு நிலையத்தை வந்தடைந்தது. இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அடையாறு ஆற்றின் சிலபகுதிகளின் கீழ் கடினமான பாறைகளின் வழியாகவும் சுரங்கப்பாதையை அமைத்தது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் முகப்பில் உள்ள வெட்டும் கருவிகள் 65 முறை சீரமைக்கப்பட்டு சுரங்கம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளுக்கு மட்டும் 178 நாட்கள் தேவைப்பட்டது.​

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next