இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பெட்டிகளை உருவாக்கும் முன்னணி நிறுவனம்... எது தெரியுமா?

india-first-bullet-train-will-be-manufacture-by-bengaluru-icf-and-it-will-travel-maharashtra-to-ahmedabad
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-09-20 21:51:00

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பெட்டிகளை உருவாக்கும் பணிக்கு முன்னணி நிறுவனம் தேர்வாகியுள்ளது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பெட்டிகளை தயாரிக்க பெங்களுரூ ஐ.சி.எஃப். நிறுவனம் தேர்வாகியுள்ளது. இந்த புல்லட் ரயில் மணிக்கு அதிகப்பட்சமாக 280 கி.மீ. வேகம் வரையிலும், பயன்பாட்டில் மணிக்கு 250 கி.மீ வேகத்திலும் செல்லக்கூடிய வகையில் தயாரிக்கப்படவிருக்கிறது. இதனை தயாரிக்க பெங்களுரூ ஐ.சி.எஃப். மட்டுமே டெண்டர் கொடுத்துள்ளது. அதனால், அந்த நிறுவனம் போட்டியின்றி தேர்வாகியுள்ளது. பெங்களுரூவில் உள்ள பி.இ.எம்.எல். ஆலையில் தயாரிக்கப்படவிருக்கிறது.

இதுகுறித்து பெங்களுரூ ஐ.சி.எஃப் பொதுமேலாளர் சுப்பாராவ் தெரிவிக்கையில், “8 பெட்டிகள் கொண்ட இரு ரயில்களை தயாரிக்க வெறும் பி.இ.எம்.எல். ஆலை மட்டுமே டெண்டர் கொடுத்தது. இந்த டெண்டர் மீது ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும். இரண்டரை வருடத்தில் இதன் உற்பத்தியை நாங்கள் முடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

எனினும் இந்த டெண்டர் எவ்வளவுக்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. இந்த ரயில்,தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அமைத்த மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.1 லட்சம் கோடி ரூபாய் செலவில், மகாராஷ்டிராவின் மும்பையில் இருந்து குஜராத்தின் அஹமதாபாத் வரையிலான 508 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்ட இந்த அதிவேக ரயில் பாதை பெங்களுரூவில் தயாரிக்கப்படும் புல்லட் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எட்டு பெட்டிகள் கொண்ட ரயில் 174 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் மாதம் தயார் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், வரும் காலத்தில் 12 முதல் 16 பெட்டிகள் வரை அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending News
Recent News
Prev
Next