நான் தோற்று விட்டேன்... கதறி அழுத விராட் கோலி - அனுஷ்கா ஷார்மா பகிர்ந்த சோகம்

cricket-i-have-failed-virat-kohli-broke-down-in-tears-says-anushka-sharma-nw-vjr
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-12-22 15:40:00

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வேறு எந்த கேப்டனையும் விட அதிக வெற்றியை பெற்ற கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் கோலி. இந்திய அணியின் கேப்டனாக அவர் விளையாடிய 68 ஆட்டங்களில் 40-ல் வெற்றி பெற வைத்துள்ளார். இருப்பினும், கோலிக்கு கேப்டன் பதவி எப்போதும் ரோஜாக்களின் படுக்கையாக இருக்கவில்லை என்பது தான் உண்மை. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 1-4 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்தபோது, அணியின் கேப்டனாக கடினமான சூழலை எதிர்கொண்டார் கோலி. அந்த சமயத்தில் கோலியின் மனநிலை என்னவாக இருந்தது மற்றும் அந்தத் தொடரில் பெற்ற தோல்வியிலிருந்து மீள அவர் என்ன செய்தார் என்பதை கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா ​​நடிகர் வருண் தவானிடம் பகிர்ந்துள்ளார். அதை தற்போது வெளியில் பகிர்ந்துள்ளார் தவான்.

இங்கிலாந்திற்கு எதிராக இந்தியா மோசமாக தோல்வியடைந்திருந்தாலும், அந்தத் தொடரில் அதிக ரன்களை குவித்தவர் கோலி தான். 2018 -ம் ஆண்டில் தனது கேரியரின் உச்சத்தில் இருந்த கோலி, இரண்டு சதங்கள் மற்றும் மூன்று அரைசதங்களை அடித்து, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 593 ரன்களை குவித்தார். இருப்பினும், அணியின் தோல்விக்கு தான் மட்டுமே காரணம், தன்னால் தான் இந்தியா தோற்றது என கோலி தன் மீது பழியை ஏற்று கொள்வதாகவும் தவான் பகிர்ந்துள்ளார்.

நல்ல ஃபார்மில் இல்லாத நேரங்களில் கோலியின் மனநிலை எனவாக இருந்தது என்பது குறித்து சில நுணுக்கமான தகவல்களை அனுஷ்கா என்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தியா தோல்வியடைந்த டெஸ்ட் போட்டியை பார்வையிட அனுஷ்கா அன்று செல்லவில்லை. கோலி எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலையில், அறைக்கு வந்து பார்த்த போது, அங்கு அவர் வேதனையில் கதறி அழுது கொண்டிருந்தார். “நான் தோல்வியடைந்து விட்டேன்” என பழியை தன் மீது சுமத்திக் கொண்டார் என அனுஷ்கா தவானிடம் கூறியுள்ளார். இதை ரன்வீர் ஷோ நிகழ்ச்சியில் வருன் தவான் பகிர்ந்துகொண்டார்.

2018-ல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அடைந்த தோல்வி, இந்திய டெஸ்ட் கேப்டனாக கோலியின் மிகப்பெரிய சீரிஸ் தோல்வியாகும். இருப்பினும் அந்த தொடரில் அவர் பேட்டிங்கில் ரன்களை குவித்தார். 2018-ம் ஆண்டிலிருந்து கோலியின் பேட்டிங் ஃபார்ம் கணிசமாகக் குறைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். 2024-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 17 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள கோலி, ஒரு அரைசதம் மற்றும் ஒரு சதத்துடன் 376 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 25 ஆக குறைந்துள்ளது கவலையளிக்கும் விஷயமாகும். டிசம்பர் 26-ம் தேதி மெல்போர்னில் நடக்கும் பாக்சிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்ள உள்ளதால், டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் தனது ஃபார்மை மீட்டெடுக்க கோலிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. பார்டர்-கவாஸ்கர் டிராபி 1-1 என சமநிலையில் இருக்கும் நிலையில், 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் இந்தியா தகுதி பெறுமா என்பதை இந்த டெஸ்ட் போட்டி தான் தீர்மானிக்கும்.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next