திமுக செயற்குழு கூட்டம்... நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள் என்னென்ன? - முழு விவரம்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைவர் திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள், கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதில் குறிப்பாக, அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய விவகாரத்தில் திமுக செயற்குழு கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் புயல் வெள்ள நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி நிதி வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. அதேபோல் உரிய நிதியை வழங்காமல் வஞ்சிப்பதாக மத்திய அரசுக்கு திமுக செயற்குழுவில் கண்டனம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம் ஆடுவதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதிமுகவும், பாஜகவும் கைகோர்த்து டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை நடத்தியது எனவும், கல்வித்துறையில் தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.