இன்டர்நெட் சென்சேஷனான 'லிட்டில் ஜாகீர்கான்' - சச்சினை அசரவைத்த சிறுமி!
ஜாகீர்கான் போல் அசத்தலாக பந்துவீசும் சிறுமியின் வீடியோவை கண்டு அசந்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
சுஷீலா மீனா என்ற சிறுமி கச்சிதமாக பந்து வீசுவதை சச்சின் டெண்டுல்கர் வியந்து பாராட்டியுள்ளார். முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானைப் போலவே இடது கையில் பந்து வீசிய சிறுமியின் காட்சி இந்தியா முழுவதும் கவனம் பெற்று வருகிறது. இது தொடர்பான காட்சிகளை பகிர்ந்துள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், “இது உங்களின் பந்துவீச்சு ஸ்டைல் போலவே இருக்கிறதே” என்று ஜாகீர் கானை டேக் செய்தார்.
இதனை கண்ட ஜாகீர் கான் “சிறப்பான ஆட்டத்தையும் நம்பிக்கையையும் அந்த சிறுமி அளிப்பதாக” பதிவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் தரியாவாட் பகுதியைச் சேர்ந்த இந்த சிறுமிக்கு முறையான பயிற்சி இருந்தால் கிரிக்கெட்டில் பெரிதாக சாதிப்பார் என்றும் ஆதரவு குரல்களும் எழுந்துள்ளன.
Ads
Recent Sports News
Trending News
Recent News