பள்ளிக்கூட நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்: 30 பேர் பலி
அபுஜா,
நைஜீரியா நாட்டின் ஒயொ மாகாணம் பசொரன் நகரில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆண்டு நிறைவையொட்டி அந்த பள்ளிக்கூடத்தில் நேற்று கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க மாணவ, மாணவியரின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். நிகழ்ச்சியின்போது பரிசு பொருட்களும் கொடுக்க ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தது.
இதனால், நிகழ்ச்சியை காணவு, பரிசு பொருட்களை வாங்கவும் பள்ளிக்கூடத்தில் கூட்டம் குவிந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது . இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.