விஜய் உடன் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பா? திருமா சொன்ன பதில்

participation-with-vijay-in-the-ambedkar-book-release-event-thirumavalavan-answered
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-05 12:40:00

தவெக மாநாட்டில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று விஜய் கூறி அரசியலில் பரபரப்பை கிளப்பினார். திருமாவளவனின் நீண்ட நாள் கோரிக்கைக்கு விஜய் ஆதரவு கொடுத்த நிலையில் தவெக - விசிக கூட்டணிக்கான அச்சாரமாகவே இந்த அறிவிப்பு பார்க்கப்பட்டது. இதையடுத்து திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விசிக கட்சி தவெக உடன் கூட்டணி அமைக்குமா என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக உடனே கூட்டணி தொடரும் என்று திருமாவளவன் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் டிசம்பர் 06 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் அம்பேத்கர் புத்தக வௌியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இருவரும் ஒரே மேடையில் பங்கேற்பார்களா? கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இது தெடார்பாக பதில் அளித்தார். அதில், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஓராண்டு முன்பே திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று முதல் பதிப்பை வெளியீடுவார் அதை நான் பெற்றுக் கொள்வேன் என திட்டமிடப்பட்டு இருந்தது.

மேலும் இந்த புத்தக வெளீயிட்டு நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தி, ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களையும் அழைக்க திட்டமிடப்பட்டது. தவெக மாநாட்டிற்கு முன் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது இந்த நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கும் பட்சத்தில் அரசியல் சூழலை கருத்துக் கொண்டு நிர்வாகிகள் உடன் பேசி நான் பங்கேற்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் 2026 சட்டசபை தேர்தலிலும் திமுக உடனான கூட்டணியே தொடரும் என்று திட்டவட்டமாக கூறினார்.

மேலும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார் என்று சீமான் கூறியிருக்கிறாரா? என்ற கேள்விக்கு, இதற்கும் புத்திசாலித்தனத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு எந்த தேவையும் எழவில்லை. நாங்கள் ஏற்கனவே ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகத்திடன், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பங்கு வகித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next