செல்போன் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை

college-student-commits-suicide-after-mother-scolds-him-for-using-cell-phone
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-11-04 10:48:00

மதுரை,

மதுரை விரகனூர் மகாராஜா நகரை சேர்ந்தவர் விஜய சுந்தர். இவரது மகன் நித்தியானந்தம் (19 வயது). இவர் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் செல்போனில் அதிக நேரம் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதை அவரது தாய் பலமுறை கண்டித்துள்ளார். சம்பவத்தன்று நித்தியானந்தம் படிக்காமல் செல்போன் பார்த்து கொண்டிருந்தார். அதனை அவர் தாய் கண்டித்தார்.

இதனால் மனமுடைந்த நித்தியானந்தம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அவரது தந்தை விஜய சுந்தர் போலீசில் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next