அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவி.!
சென்னை மாணவி பாடிய பாடல் ஒன்று, அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் கவனத்தை பெற்றுள்ளது. அந்த பாடல் சொல்லும் செய்தி என்ன? என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபர் என்ற உயர் பொறுப்பில் இருந்தபோதிலும், கொரோனா காலக்கட்டத்தில் பலராரும் நிறவெறி தாக்குதல்களுக்கு உள்ளான போது, அவருக்கு ஆதரவாக சென்னையில் இருந்து ஒலித்த பாடல்தான் இது.
கமலாவை விமர்சிப்பவர்களுக்கும், கேலி செய்பவர்களுக்கும் உரிய பதிலடி கொடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இந்த பாடலை உருவாக்கியதாகக் கூறுகிறார் சென்னை மாணவி கனிஷ்கா.
கொரோனா காலக்கட்டத்தில் கமலாவுக்கு ஆதரவாக பாடப்பட்ட இந்தப் பாடல், தற்போது அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் நேரத்தில் அதிகம் பேசப்படுகிறது. சமூக ஊடகங்களில் வைரலான இந்தப் பாடல், கமலாவின் கவனத்தையும் பெற்றுள்ளது.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று கமலா ஹாரிஸ் வரலாறு படைக்கும்போது, அவரை வாழ்த்தி முதல் பாடலாக தனது பாடல் ஒலிக்கும் என்றும் கனிஷ்கா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரான பிறகு கமலா ஹாரிஸை நேரில் சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் 12 ஆம் வகுப்பு மாணவி கனிஷ்கா விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.