இந்தியாவுக்கு எதிரான டி20 & ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

england-squad-announced-for-t20-odi-series-against-india
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-12-22 22:03:00

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்த தொடர் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி தொடங்க உள்ளது. முதலில் டி20 தொடரும் அதற்கடுத்து ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இந்த தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அணிகளுக்கும் ஜோஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியே எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் விளையாடும் என்று அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு:-

சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் அணி:- ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி சுமித், லியாம் லிவிங்ஸ்டன், அடில் ரஷீத், ஜோ ரூட், சாகிப் மக்மூத், பில் சால்ட், மார்க் உட்

டி20 அணி:- ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி சுமித், லியாம் லிவிங்ஸ்டன், அடில் ரஷீத், சாகிப் மக்மூத், பில் சால்ட், மார்க் வுட்

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next