மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணி 314 ரன்கள் குவிப்பு

womens-odi-cricket-indian-team-accumulated-314-runs
  • Publisher : dailythanthi
  • Author : -
  • Last Update : 2024-12-22 23:28:00

வதோதரா,

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் டி20 போட்டி வதோதராவில் இன்று நடைபெறுகிறது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடியது. இதனால் 50 ஓவர்கள் முடிவில் 9விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 314 ரன்கள் எடுத்தது . இந்திய அணியில் சிறப்பாக விளையாடி ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜைதா ஜேம்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . தொடர்நது 315 ரன்கள் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடுகிறது.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next