மகளிர் உலகக்கோப்பை டி20 : பாகிஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில் இந்திய அணி வெற்றி பெற எளிதான இலக்கு…

cricket-womens-world-cup-t20-easy-target-for-team-india-against-pakistan-womens-team
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-10-06 17:32:00

மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற எளிதான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மகளிருக்கான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.

இந்த மேட்ச்சில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, 58 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தனது 2 ஆவது ஆட்டத்தில் இந்திய அணி, தற்போது பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீராங்கனைகளாக முனீபா அலி, குல் பெரோசா களம் இறங்கினர். பெரோசா ரன் ஏதும் எடுக்காமலும், அடுத்து வந்த சித்ரா அமின் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

தொடக்க வீராங்கனை முபீனா அலி 17 ரன்களில் வெளியேற ஒமைமா சோஹைல் 3 ரன்கள் எடுத்திருந்தபோது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து வந்த வீராங்கனைகளில் அலியா ரியாஸ் 4 ரன்களும், பாத்திமா சனா 13 ரன்களும் எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 105 ரன்கள் எடுத்துள்ளது. 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.

அடுத்த சுற்றான நாக் அவுட் சுற்றுக்கு இந்திய அணி முன்னேற, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவது கட்டாயம். தோல்வியடைந்தால் மற்ற அணிகளின் போட்டி முடிவின் அடிப்படையில் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம். முதல் போட்டியில் படுதோல்வி அடைந்திருப்பதால் இந்திய அணியின் ரன்ரேட் – 2.99 ஆக உள்ளது.

அடுத்த சுற்றுக்கு எளிதாக முன்னேற, இன்றைய போட்டி மற்றும் அடுத்தடுத்து நடைபெறவுள்ள இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா அதிக ரன்ரேட்டுடன் வெற்றி பெற வேண்டும்.

Ads
Recent Sports News
Trending News
Recent News
Prev
Next