டிஜிட்டல் இந்தியா சாதனைகள் பற்றி தெரிந்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!

you-will-be-amazed-to-know-about-the-achievements-made-by-digital-india
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-04 19:46:00

டிஜிட்டல் கட்டமைப்பு, அறிவுத்திறன் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் இந்தியா முயற்சியானது பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக 9 வருடங்களை நிறைவு செய்கிறது. இது பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

உதாரணமாக அரசு பகிர்ந்துள்ள ஒரு சில தகவல்களின் அடிப்படையில், கிட்டத்தட்ட 11 கோடி விவசாயிகள் தற்போது நேரடியாக தங்களுடைய வங்கிக் கணக்குகளில் பொருளாதார பலன்களை பெற்று வருகிறார்கள். அதேபோல 137 கோடிக்கும் மேற்பட்ட ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டு, அவை ஒவ்வொரு இந்தியரின் தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டையாக திகழ்ந்து வருகிறது. மேலும் ஆதார் பல்வேறு சேவைகளை ஒழுங்குபடுத்தி, அரசு சார்ந்த பலன்கள் மற்றும் சேவைகள் மில்லியன் கணக்கான மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்து வருகிறது.

டிஜிலாக்கர் இதுவரை 674 கோடிக்கும் அதிகமான டாக்குமெண்ட்களை வழங்கியுள்ளது. ஒருவேளை இந்த ஒவ்வொரு டாக்குமெண்ட்டும் ஒரு தனி தாளாக இருந்திருந்தால் அது தோராயமாக 2.7 மில்லியன் கேபினட் டிராயர்களை நிரப்பி இருக்கும். இந்த மாதிரியான டிஜிட்டல் ஆவணப்படுத்தும் முறை சேமிப்பை எளிமையாக்கி, ஆவணங்கள் எளிதாக கிடைப்பதை உறுதிப்படுத்துகிறது. பாரத்நெட் ப்ராஜெக்டின் கீழ், 6.83 லட்சம் கிலோ மீட்டர்களுக்கு ஆப்டிகல் ஃபைபர் அமைக்கப்பட்டு, இந்தியாவின் தொடர்பு கட்டமைப்பு குறிப்பிடத்தக்க வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபைபர் நகரம் மற்றும் கிராமப்புறங்களை டிஜிட்டல் ரீதியாக இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அடுத்தபடியாக யூனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸ் அதாவது UPI கிட்டத்தட்ட 535 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான ட்ரான்ஸாக்ஷன்களை செய்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் முறையில் UPI குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 34.6 கோடி ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டு, இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணமில்லா மருத்துவ சேவைகள் பெறுவதற்கான தகுதியை அளித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையை காட்டிலும் அதிகம். மேலும் மில்லியன் கணக்கான இந்தியர்கள் தரமான மருத்துவ சேவைகளை பெறுவதில் இந்த முயற்சி பெரும் பங்கு வகிக்கிறது.

கூடுதலாக 9 கோடிக்கும் அதிகமான FASTags வழங்கப்பட்டுள்ளது. சுங்கவரி பேமெண்ட்கள் செலுத்துவதை இந்த FASTags எளிமைப்படுத்தி, நெடுஞ்சாலைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுத்து, பயணிகளுக்கு சுமூகமான பயண அனுபவத்தை அளிக்கிறது. இது மாதிரியான குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு அங்கீகாரம் வழங்கும்விதமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சோஷியல் மீடியாவில், “டிஜிட்டல் இந்தியா என்பது வல்லமைமிக்க இந்தியா. இது வாழ்க்கையை எளிமைப்படுத்துகிறது. கடந்த பத்து வருடங்களில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த சாதனைகள் நாம் எடுத்துள்ள முயற்சியின் விளைவாக கிடைத்த பலன்களின் ஒரு சிறிய பகுதி மட்டுமே. தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்தியமைக்கு நன்றி,” என்று கூறியுள்ளார்.

Trending News
Recent News
Prev
Next