யூடியூப் சேனலில் பணம் சம்பாதிப்பது எப்படி.? உங்கள் சேனலைப் பணமாக்க ஈசியான டிப்ஸ்

how-to-make-money-on-youtube-channel
  • Publisher : news18
  • Author : -
  • Last Update : 2024-07-04 21:50:00

கன்டென்ட் கிரியேட்டர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், வருமானத்தை ஈட்டவும் யூடியூப் சேனல், ஒரு இலாபகரமான தளமாக மாறியுள்ளது. யூடியூப்பை பொறுத்தவரை, சேனல் தொடங்குவதற்கென எந்த முதலீடும் தேவையில்லை. இணைய இணைப்பும், உங்களுக்கென ஒரு கூகுள் கணக்கும் இருந்தாலே போதும்.

யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் தொடங்கலாம். யூடியூபை பொறுத்தவரை நமது திறமைதான் முதலீடு. பலதரப்பட்ட மக்களையும் உங்களது சேனலைப் பார்க்க வைப்பதுதான் அதற்குத் தேவையான திறமை. இன்றைக்குப் பலரும் ஆண்ட்ராய்ட் மொபைல் வைத்திருக்கிறோம். அந்த மொபைலிலேயே ஷூட் செய்து, அதிலேயே எடிட்டிங்கும் செய்ய பல அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. சேனல் தொடங்குவது எளிது. தொடங்கி அதில் எப்படி சம்பாதிக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியம்.

உங்கள் கன்டென்ட்டை பணமாக்குவதற்கு யூடியூப் பார்ட்னர் ப்ரோக்ராமர் (YPP) திட்டத்தில் சேர்வது மிகவும் முக்கியமானது. இந்தத் திட்டமானது கிரியேட்டர்கள் தங்களது வீடியோக்களில் காட்டப்படும் விளம்பரங்களில் இருந்து பணம் சம்பாதிக்க அனுமதிக்கிறது. யூடியூப் பார்ட்னர் ப்ரோக்ராமர் திட்டத்தில் சேர்வதற்கான தகுதிகள் மற்றும் பணம் சம்பாதிக்க எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது உட்பட சில வழிகாட்டுதல்களைப் பற்றி பார்ப்போம்.

யூடியூப் பணமாக்குதல் என்றால் என்ன?

விளம்பரங்கள், சேனல் மெம்பர்ஷிப்கள், சூப்பர் சாட் மற்றும் விற்பனைப் பொருள்கள் மூலம் பணம் சம்பாதிக்க யூடியூப் கிரியேட்டர்களை அனுமதிக்கிறது. இந்த அம்சங்களைப் பெற, நீங்கள் யூடியூப் பார்ட்னர் ப்ரோக்ராமர் (YPP) திட்டத்தில் சேர வேண்டும்.

யூடியூப் பார்ட்னர் ப்ரோக்ராமர் திட்டத்தின் தகுதி:

உங்கள் யூடியூப் சேனலைப் பணமாக்குவதற்கு முன், பின்வரும் தகுதிகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்:

அனைத்தையும் பின்பற்றவும்:

யூடியூப்-ன் அனைத்து பாலிசிஸ் மற்றும் கைட்லைன்ஸ் ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். சமூக வழிகாட்டுதல்கள், சேவை விதிமுறைகள் மற்றும் பதிப்புரிமைச் சட்டங்கள் இதில் அடங்கும்.

உங்கள் நாட்டில் யூடியூப் பார்ட்னர் ப்ரோக்ராமர் திட்டம் உள்ளதா :

நீங்கள் வசிக்கும் நாட்டில் யூடியூப் பார்ட்னர் ப்ரோக்ராமர் திட்டம் உள்ளதா எனப் பார்க்கவும். இந்த திட்டத்தை யூடியூப் பல நாடுகளில் வழங்குகிறது, ஆனால் உலகம் முழுவதிலும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கடந்த 12 மாதங்களில் 4,000-க்கும் மேற்பட்ட வாட்ச் ஹவர்ஸ்:

உங்கள் கன்டென்ட் கடந்த 12 மாதங்களில் பொதுமக்களிடமிருந்து 4,000-க்கும் மேற்பட்ட வாட்ச் ஹவர்ஸ் பெற்றிருக்க வேண்டும்.

1,000-க்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்கள்:

உங்கள் சேனலுக்கு நீங்கள் குறைந்தது 1,000 சப்ஸ்கிரரைபர்களை பெற்றிருக்க வேண்டும்..

இணைக்கப்பட்ட AdSense கணக்கை வைத்திருங்கள்:

பணம் பெற , உங்கள் யூடியூப் சேனலுடன் AdSense கணக்கை இணைத்திருக்க வேண்டும்.

யூடியூப்-இல் பணம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

உங்கள் கூகுள் கணக்கை இயக்க ஸ்டெப் 2 வெரிஃபிகேஷன் செயல்படுத்தவும். உங்கள் கணக்கைப் பாதுகாக்க இந்த பாதுகாப்பு நடவடிக்கை அவசியமாகும்.

உங்கள் யூடியூப் கணக்கில் உள்நுழைய வேண்டும்.

மேல் வலது மூலையில், உங்கள் ப்ரொபைல் பிக்சரை கிளிக் செய்து, “யூடியூப் ஸ்டுடியோ” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இடது பக்கத்தில் உள்ள சைடுபாரில், “மோனிடேசேஷன் " டேப் -ஐ கிளிக் செய்யவும், பின்பு மோனிடேசேஷன் ஓவர்வியூ பக்கத்திற்கு செல்லும்.

“ரிவியூ பார்ட்னர் ப்ரோக்ராமர் டெர்ம்ஸ் " கார்டில், ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து விதிமுறைகளைப் படிக்கவும். நீங்கள் ஒப்புக்கொண்டால், அவற்றை ஏற்க கிளிக் செய்து தொடரவும்

உங்களிடம் ஏற்கனவே AdSense கணக்கு இல்லையென்றால், நீங்கள் ஒன்றை உருவாக்கி அதை உங்கள் யூடியூப் சேனலுடன் இணைக்க வேண்டும். இந்த செயல்முறையைத் தொடங்க, “Google AdSenseக்காகப் பதிவு செய்” கார்டில் “ஸ்டார்ட்” என்பதை கிளிக் செய்யவும்.

“செட் மோனிடேசேஷன் பிரஃபிரென்சஸ்” கார்டில் “ஸ்டார்ட்” என்பதை கிளிக் செய்யவும். உங்கள் சேனலில் நீங்கள் இயக்க விரும்பும் விளம்பரங்களின் வகைகளை இங்கே தேர்ந்தெடுக்கலாம். தேவைப்பட்டால் இந்த விருப்பங்களை நீங்கள் பின்னர் சரிசெய்யலாம்.

மேலே உள்ள ஸ்டெப்ஸ்களை நீங்கள் முடித்தவுடன், உங்கள் சேனலை உறுதிசெய்ய YouTubeஆல் மதிப்பாய்வு செய்யப்படும். இந்த செயல்முறை முடிய சில நாட்கள் முதல் பல வாரங்கள் வரை ஆகலாம். நிறுவனம் மூலம் முடிவு எடுக்கப்பட்டதும் மின்னஞ்சல் மூலம் அந்த தகவல் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

Trending News
Recent News
Prev
Next