Gold Rate: நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

today-gold-price-in-chennai-nw-mma
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-25 10:23:00

நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில், கடந்த ஆறு நாட்களாக தங்கம் விலை உயர்ந்தது. இந்நிலையில், ஆறுதலாக இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

நேற்று முன்தினம் (நவம்பர் 23ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.75 அதிகரித்து, ரூ.7,300-க்கும், ஒரு சவரன் ரூ.600 அதிகரித்து ரூ.58,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று விடுமுறையை அடுத்து இன்று தங்கம் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. இன்றைய விலை நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதியை கொடுக்கலாம்.

ஏனென்றால், இன்று (நவம்பர் 25ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.100 குறைந்து, ரூ.7,200-க்கும், ஒரு சவரன் ரூ.800 குறைந்து ரூ.57,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,940-க்கும், ஒரு சவரன் ரூ.640 குறைந்து ரூ.47,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து ஆறு நாட்களுக்கும் மேலாக உயர்ந்துவந்த தங்கம் விலை சற்று குறைந்திருப்பதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News
Recent News
Prev
Next