School Leave: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டி உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வரும் 23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் கடந்த 20-ஆம் தேதி ஏற்பட்ட மேகவெடிப்பின் காரணமாக 43 செ.மீ. மழை கொட்டியதும், அதனால் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.