Vastu Tips | வீட்டில் இந்த பொருட்களை வைப்பதால் சண்டை சச்சரவுகளில் இருந்து விடுபட முடியுமா? - வாஸ்து சொல்வது என்ன?

can-keeping-these-things-in-the-house-save-you-from-fights-nw-asg
  • Publisher : News18 (Ta)
  • Author : -
  • Last Update : 2024-11-22 07:26:00

வாஸ்து சாஸ்திரமானது வேத சாஸ்திரத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது. வீடு கட்ட தொடங்கியது முதல் ஒருவருடைய வாழ்வில் வாஸ்து சாஸ்திரம் முக்கிய இடம் பெற்று விடுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் தான் எந்த அறைகள் எங்கு இடம்பெற வேண்டும் என்பது முடிவு செய்யப்படுகிறது.

அதோடு எந்த பொருள் எங்கு இடம் பெற வேண்டும்?, எந்த பொருள்களை வீட்டிற்குள் வைக்க கூடாது?, எந்த பொருட்களை எந்த திசையில் வைக்க வேண்டும்? உள்ளிட்ட பல விஷயங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் இடம் பெற்றுள்ளன. சில பொருட்களை வீட்டிற்குள் வைப்பதால் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் வரும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே உள்ளது. சில பொருட்களை சரியான திசையில் வைப்பதால் வீட்டிற்குள் வைப்பதால் நேர்மறை ஆற்றல் வருகிறது என்ற நம்பிக்கையும் மக்களிடையே உள்ளது.

அந்த வகையில் புத்தர் சிலையை வாஸ்துபடி வீட்டில் வைக்கலாமா?, அவ்வாறு வைத்தால் எந்த திசையில் வைக்கலாம்?, அதோடு வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகமாக இருந்தால் அதை சரி செய்ய என்ன பொருட்களை வீட்டில் வைக்கலாம். இவற்றை வைப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

புத்தர் சிலை: வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்க புத்தர் சிலையை பயன்படுத்தலாம். புத்தர் சிலையை வீட்டின் வரவேற்பு அறை அல்லது பால்கனியில் வைக்கலாம். வீட்டில் புத்தர் சிலையை வைப்பதன் மூலம் அமைதி உருவாகும்.

அறையின் திசைகள்: வாஸ்து தோஷங்களால் வீட்டில் அதிக பிரச்சினைகள் ஏற்படும். வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்காமல் இருக்க வீடு கட்டும்போதோ அல்லது வாடகைக்கு வீடு பார்க்கும் போதே வடகிழக்கு மூலையில் கழிப்பறை இல்லாமல் பார்த்துகொள்ளுங்கள். அதைப்போல தென்கிழக்கு திசையில் சமையலறை இருப்பது மிகவும் மங்களகரமானது ஆகும்.

கல் உப்பு: கல் உப்பை வீட்டின் வாயில் வைப்பதன் மூலம் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் வராமல் தடுக்கப்படுகிறது. வீட்டின் மூலைகளில் கல் உப்பை பாத்திரத்தில் கொட்டி வைப்பதன் மூலம் வீட்டில் அமைதி கூடும். மாதம் ஒருமுறை இதனை மாற்ற வேண்டும்.

வீட்டின் வடகிழக்கு மூலை: வாஸ்து சாஸ்திரத்தின்படி, வடகிழக்கு திசையை சுத்தமாக வைத்திருகக் வேண்டும். வெளிச்சம் நிறைந்ததாகவும் வைத்திருக்க வேண்டும். வீட்டில் வடகிழக்கு மூலை சுத்தமாக இருந்தால் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. நியூஸ்18 தமிழ்நாடு இது தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. எந்தவொரு தகவலையும் செயல்படுத்துவதற்கு முன்புசம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.

Ads
Recent All News News
Trending News
Recent News
Prev
Next