spicy food: நீங்க அதிக காரமான உணவுகளை சாப்பிறீங்களா..? இதயநோய் மருத்துவர் சொல்லும் அறிவுரையை கேளுங்க!
நம்மில் பெரும்பாலோர் காரமான உணவுகளை விரும்புகிறோம். ஒரு உணவிற்கு சுவையை கொடுப்பதில் மசாலாப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காரமான மசாலாவானது சுவை சேர்க்கிறது. இருப்பினும், நீங்கள் மிளகாய் அதிகமாக சாப்பிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். குறிப்பாக காரமான உணவு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஆனால் காரமான உணவுகளால் தீமைகள் மட்டுமின்றி நன்மைகளும் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். காரமான உணவை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை என்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
காரமான உணவு இதயத்திற்கு நல்லது என்று சமீபத்திய ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மிளகாயில் உள்ள கேப்சைசின் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதய ஆரோக்கியத்தில் காரமான உணவின் தாக்கம் குறித்து நீண்ட காலமாக விவாதம் தொடர்கிறது. சிலர் இதயத்திற்கு ஆரோக்கியமானது என்று நம்புகிறார்கள். அதே நேரத்தில், சிலர் அதன் தீமைகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள். மிளகாயில் கேப்சைசின் உள்ளது, இது உடலில் ஏற்படும் அழற்சியை குணப்படுத்துகிறது. மேலும் இது இன்ஃபிளமேஷன் மற்றும் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் ஆகியவற்றை குறைக்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளை கொண்டுள்ளது. இவை இதய ஆரோக்கியத்திற்கு நனமை அளிக்கும்.
இதுகுறித்து ஹைதராபாத்தின் கேர் மருத்துவமனைகள் ஹைடெக் சிட்டியின் ஆலோசகர் இதயநோய் நிபுணரான மருத்துவர் வினோத்தின் கூற்றுப்படி, காரமான உணவை தினமும் சாப்பிடுவதற்கும், மாரடைப்புக்கும் நேரடி தொடர்பு இல்லை. உண்மையில், காரமான உணவுகளில் உள்ள கேப்சைசின் பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது என்று கூறியுள்ளார்.
ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள்: மிளகாயில் உள்ள கேப்சைசின் ஆனது ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக வீக்கம் மற்றும் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்-ஐ குறைக்க உதவுகிறது. இதன் காரணமாக இதய நோய அபாயத்தையும் குறைக்கிறது.
வளர்சிதை மாற்றம்: மிளகாயில் உள்ள கேப்சைசின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம், இது எடை பராமரிக்க உதவுகிறது மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
இரத்த அழுத்தம்: சில ஆய்வுகளின் படி, மிளகாயில் உள்ள கேப்சைசின் ஆனது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, இதனால் இதயத்தின் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
நீங்கள் காரமான உணவை ருசிப்பவராக இருந்தால், அதை உங்கள் உணவில் பாதுகாப்பாக சேர்த்துக்கொள்ள சில குறிப்புகள் இங்கே உள்ளன என்று மருத்துவர் வினோத் கூறியுள்ளார்:
காரமான உணவுகளை உங்கள் உணவில் படிப்படியாக சேர்த்துக் கொள்ளுங்கள், இதனால் உங்கள் உடலை சரிசெய்ய உதவுகிறது.
திடீரென உணவில் காரத்தை அதிகரிக்க நினைப்பவர்கள், பெல் பெப்பர்ஸ், பாப்ரிகா மற்றும் பனானா பெப்பர்ஸ் போன்ற மசாலாப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுவும், அவை அதிக வெப்பம் இல்லாமல் உணவில் சுவையை வழங்குகிறது.
வீக்கத்தைக் குறைக்க மஞ்சள், இஞ்சி மற்றும் பூண்டு போன்ற மசாலாப் பொருட்களை உங்கள் சமையலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
காரமான உணவுகளை தயிர், அவகேடோ அல்லது வெள்ளரி போன்ற குளிரூட்டும் உணவுகளை காரமான உணவுகளுடன் சேர்த்து சாப்பிடவும், இது உங்கள் செரிமான மண்டலத்தை ஆதரிக்கிறது.
காரமான உணவுகளை எடுத்து கொள்ளும்போது, நிறைய தண்ணீர் குடிப்பது செரிமான கோளாறுகளை போக்க உதவுகிறது.
இருப்பினும், மிகவும் காரமான உணவுகளை அதிகமாக சாப்பிடுவது செரிமான பிரச்சனைகள் மற்றும் அசௌகரியங்ககளை உண்டாக்கும், இது மறைமுகமாக இதய ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.